கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் காரணமாக பல்வேறு நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை கடைப்பிடித்தனர்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து மீண்டும் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யும் நிலை ஏற்பட்டதால் வீட்டு வாடகை மீண்டும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தோள் கொடுப்பான் தோழன்.. பரிதவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவ வந்த கத்தார் முதல் UAE வரை.. எப்படி?
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவை பொருத்தவரை தற்போது பல முக்கிய ஐடி நிறுவனங்கள் மீண்டும் நிறுவனங்களில் வந்து வேலை செய்யும் முறையை கடைபிடித்து வருகின்றன. இதனால் ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் முறையை முடித்துவிட்டு அலுவலத்திற்கு திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத் ஐடி ஊழியர்கள்
அந்த வகையில் இந்தியாவில் ஐடி துறையின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஐதராபாத் நகரத்தில் தற்போது 90 சதவீத ஊழியர்கள் அலுவலத்திற்கு செல்ல தொடங்கி விட்டதை அடுத்து வீட்டு வாடகையை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வொர்க் ப்ரம் ஹோம் முறை முடிவுக்கு வந்து மீண்டும் அலுவலகம் செல்லும் முறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தற்போது வீட்டின் வாடகை விலையை உயர்த்தி உள்ளதாகவும் வீட்டு உரிமையாளர்கள் 5% முதல் 10% வரை வாடகையை உயர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரியல் எஸ்டேட் துறை
தகவல்தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலானோர் தங்கள் அலுவலகத்திற்கு அருகிலேயே தங்க வேண்டும் என்று விரும்புவதால் பெரும்பாலான ரியல் எஸ்டேட் துறையினர்களின் விற்பனை ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீட்டு உரிமையாளர்களுக்கு ஜாக்பாட்
முக்கியமாக ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி, கோண்டாப்பூர், மியாபூர், எல்.பி.நகர், அதிபட்லா ஆகிய பகுதிகளில் வாடகை அதிகரித்துள்ளதாகவும் இதனால் வீட்டு உரிமையாளர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
5-10% உயர்வு
வீட்டு உரிமையாளர்கள் கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை விட தற்போது 5 முதல் 10 சதவீதம் வரை வாடகையை உயர்த்தியுள்ளதாகவும் அதேபோல் அட்வான்ஸ் தொகையையும் உயர்த்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனாரோக் அறிக்கை
தென்னிந்தியாவின் முக்கிய ஐடி நகரங்களான ஹைதராபாத், சென்னை, பெங்களூரு உள்பட முக்கிய நகரங்களில் தற்போது வீடுகளின் தேவை அதிகரித்துள்ளதால் வீட்டின் விலை மற்றும் வாடகை உயர்ந்துள்ளது என அனாரோக் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
As Work From Home Ends, House Rents Set to Increase in Hyderabad!
As Work From Home Ends, House Rents Set to Increase in Hyderabad! முடிவுக்கு வந்தது வொர்க் ப்ரம் ஹோம்.. ஐதராபாத்தில் வீட்டு வாடகை திடீர் உயர்வு