ராகுல்காந்தி யாத்திரை; ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் என கே.எஸ்.அழகிரி தகவல்

KS Alagiri says Stalin starts Rahul Gandhi yatra: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நடைபயணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் கலந்துக்கொண்டு துவக்கி வைக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ’இந்தியா ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். கட்சி சாராத நடைபயணமாக ராகுல் காந்தி இந்த யாத்திரையை திட்டமிட்டுள்ளார். இதனால் பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இந்த நடைபயணத்தில் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: 100 வாகனங்கள்… 10 லட்சம் விதைகள்… பனைமரம் வளர்ப்பை தொடங்கி வைத்த அமைச்சர்

இந்த நடைபயணம் செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறது. இதனிடையே இந்த நடைபயணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு துவக்கி வைக்க உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பா.ஜ.க.,வின் தவறான அரசியல் மற்றும் பொருளாதார கொள்கையை வெளிப்படுத்தவும், நாட்டில் நிலவும் அமைதியின்மை, மக்களை பிரிக்கும் சித்தாந்தத்துக்கு எதிரான சித்தாந்தத்தை கையில் எடுத்துதான் ராகுல் நடைபயணத்தை மேற்கொள்கிறார் என கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.