ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 45வது ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதன் பங்குகள் 3 மணியளவில் 0.71 சதவீதம் என 18.55 புள்ளிகள் சரிந்து வத்தகம் செய்யப்பட்டு வந்தது.
ரிலையன்ஸ் ஜியோ 45வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் எல்லோரும் எதிர்பார்த்தபடி தீபாவளி முதல் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 5ஜி சேவை அறிமுகம் ஆக உள்ளதாக அறிவித்தது,
மேலும் ரிலையன்ஸ் பெட்ரோலியம், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடெயில் என எல்லா வணிகங்களிலும் தங்களது வர்த்தகம் பல மடங்குகள் வளர்ந்து வருவதாகத் தெரிவித்தது. இருந்தாலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறன.
reliance agm 2022: சாதனை படைத்து வரும் ரிலையன்ஸ் ரீடெயில்.. வருடாந்திர கூட்டத்தில் முக்கிய அப்டேட்!
பங்குச்சந்தை
ஆசியாவின் டாப் 10 ரீடெயில் நிறுவனங்களில் ஒன்றாக ரிலையன்ஸ் ரீடெயில் உருவாகியுள்ளது என அறிவிக்கப்பட்ட போது ரிலையன்ஸ் பங்குகள் 0.71 சதவீதம் என 18.55 புள்ளிகள் சரிந்து வத்தகம் செய்யப்பட்டு வந்தது. இன்று மாலை பங்குச்சந்தை முடியும் தறுவாயில் சென்செக்ஸ் 900+ புள்ளிகளும், நிப்டி 250+ புள்ளிகளும் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வந்தன.
சந்தை நேர முடிவில் ரிலையன்ஸ் பங்குகள் 18.75 சரிந்து 2600 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. சென்செக்ஸ் 861.25 புள்ளிகள் சரிந்து 57,972.62 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது. நிப்டி 246 புள்ளிகள் சரிந்து 17,312.90 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
ஆண்டு பொதுக்கூட்டம்
ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது எதிர்கால திட்டங்கள் என பலவற்றை அறிவித்தும் அதன் பங்குகளை பங்ச்சைந்தை சரிவிலிருந்து மீட்க முடியவில்லை.
எண்ணெய் & எரிவாயு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் முக்கிய துறையான எண்ணெய் துறை சார்ந்த பங்குகள் 10.10 சதவீதம் உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு ரிலையன்ஸ் பங்குகள் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 88 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
ஃபெடரல் வங்கி
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஃபெடரல் வங்கி தலைவர் பவல் விகிதங்களை உயர்த்துவதாக உறுதியளித்ததால், திங்களன்று பங்குச்சந்தை குறியீடுகள் மூழ்கின. சென்செக்ஸ் 58,000 ஆகவும், நிஃப்டி 17,300 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்தில் உள்ளன, ஆனால் FMCG ஓரளவு நிலையாக உள்ளது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து 80.15 ரூபாயாக உள்ளது. பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வரும் நாட்களில் ரூபாய் மதிப்பு மேலும் சரிய அதிக வாய்ப்புகள் உள்ளது.
Annual General Meeting of Reliance Industries Limited Unable To Help Stock Market Fall
Annual General Meeting of Reliance Industries Limited Unable To Help Stock Market Fall | ரிலையன்ஸ் ஆண்டு பொதுக் கூடத்தின் பிரம்மாண்ட அறிவிப்புகளின் போதும் பங்குகள் சரிவு.. என்ன காரணம்?