ரிலையன்ஸ் ரீடைல்: FMCG துறையில் புதிய வர்த்தகம்.. 520 மில்லியன் வாடிக்கையாளர்கள்..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் எதிர்காலம் ரிலையன்ஸ் ஜியோ-வை தாண்டி ரிலையன்ஸ் ரீடைல் பிரிவை அதிகம் நம்பியிருக்கும் காரணத்தால் கடந்த 5 வருடத்தில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்து அதிகளவிலான முதலீடுகளையும், நிறுவனங்களையும் கைப்பற்றியது.

இதன் வாயிலாக மிகப்பெரிய வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்கள் வளர்ச்சியை அடைந்துள்ளதாக முகேஷ் அம்பானி ஆகஸ்ட் 29ஆம் தேதி நடந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45வது வருடாந்திர கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் ரிலையன்ஸ் ரீடைல் தலைவர் ஈஷா அம்பானி பல முக்கியமான வளர்ச்சி அளவீடுகளை வெளியிட்டார்.

reliance agm 2022: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் சாதனைகள்.. முகேஷ் அம்பானி பெருமிதம்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 45வது வருடாந்திர கூட்டத்தில் பேசிய ஈஷா அம்பானி, ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் சுமார் 200 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இது ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி நாடுகளின் மொத்த மக்களைத் தொகையைக் காட்டிலும் அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.

520 மில்லியன் வாடிக்கையாளர்

520 மில்லியன் வாடிக்கையாளர்

இந்தியா முழுவதும் இருக்கும் ரிலையன்ஸ் ரீடைல் கடைகளில் ஒரு வருடத்திற்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை 520 மில்லியன் ஆக உள்ளது. டிஜிட்டல் தளத்திற்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை 4.5 பில்லியன் ஆக உள்ளது. இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 2.3 மடங்கும் அதிகமாகும்.

ரிலையன்ஸ் டிஜிட்டல்
 

ரிலையன்ஸ் டிஜிட்டல்

ரிலையன்ஸ் டிஜிட்டல் வர்த்தகத் தளங்களில் தினமும் 6 லட்சம் ஆர்டர்கள் செயல்படுத்தப்படுகிறது. ரிலையன்ஸ் சுமார் 260 டவுன்களில் பொருட்களை டெலிவரி செய்கிறது. நடப்பு ஆண்டில் கிடங்கு மற்றும் புல்பிள்மென்ட் சென்டரை இரட்டிப்பு செய்யத் திட்டமிட்டு உள்ளது.

15000 கடைகள்

15000 கடைகள்

நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 2500 புதிய கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த கடைகள் எண்ணிக்கை 15000 ஆக உயர்ந்து மொத்த பரப்பளவு 42 மில்லியன் சதுரடியாக உயர்ந்துள்ளது என ஈஷா அம்பானி தெரிவித்தார்.

3,60,000 ஊழியர்கள்

3,60,000 ஊழியர்கள்

நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 1,50,000 ஊழியர்களைப் பணியில் சேர்த்த ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3,60,000 ஆக உயர்ந்துள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் தளத்தில் சுமார் 20 லட்சம் விற்பனையாளர் கூட்டணியை அமைத்துள்ளது.

ரிலையன்ஸ் டிஜிட்டல்

ரிலையன்ஸ் டிஜிட்டல்

மேலும் ரிலையன்ஸ் டிஜிட்டல் 7000 டவுன்களில் 8700 கடைகளையும், பேஷன் & லைப்ஸ்டைல் பிரிவில் 1000 டவுன்களில் 4000 கடைகளையும், நெட்மெட்ர்ஸ் 1900 டவுன்களில் சேவை அளிக்கிறது.

 FMCG பிரிவு வர்த்தகம்

FMCG பிரிவு வர்த்தகம்

இந்த வருடம் புதிதாக FMCG பிரிவில் புதிய வர்த்தகத்தை அறிமுகம் செய்வது மட்டும் அல்லாமல் அதிகளவிலான வாடிக்கையாளர்களை இப்பரிவில் உருவாக்கத் திட்டமிட்டு வருகிறது. இதேபோல் பழங்குடியினரிடம் இருந்து பொருட்களை நேரடியாக வாங்கி இந்தியா முழுவதும் விற்பனை செய்ய உள்ளது ரிலையன்ஸ் ரீடைல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

reliance retail: starting new business in FMCG; Isha ambani on customers, stores, employees, merchant partners

reliance retail: starting new business in FMCG; Isha Ambani on customers, stores, employees, merchant partners | ரிலையன்ஸ் ரீடைல்: FMCG துறையில் புதிய வர்த்தகம்.. 520 மில்லியன் வாடிக்கையாளர்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.