சென்னை : பலவிதமான கேம் ஷோக்கள், ரியாலிட்டி ஷோக்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்து, அவற்றை நம்பர் ஒன் ஆக்குவதில் விஜய் டிவிக்கு நிகர் விஜய் தான்.சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன், நீங்கள் வெல்லலாம் ஒரு கோடி, வால், பிக்பாஸ், பிக்பாஸ் ஜோடிகள் என பலவிதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது புதிய கேம் ஷோ ஒன்றை விஜய் டிவி விரைவில் அறிமுகம் செய்ய போகிறது. இந்த நிகழ்ச்சிக்கான அதாவது ஒருவர் வைக்கும் பணத்தை விட அதிகமான தொகையை வைக்க வேண்டும். அவர் அதை ஏற்க மறுத்தால் மேலும் தொகையை வைக்க வேண்டும்.
இந்த புதிய ஷோவிற்கான ப்ரொமாவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஊ சொலறியா? ஊஹும் சொல்றியா?…யெஸ் ஆர் மிஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கேம் ஷோம் செப்டம்பர் 4 ம் தேதி ஆரம்பமாகிறது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு ஊ சொல்றியா? ஊ ஹும் சொல்றியா? நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியையும் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர்களான மாகாபா மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்க உள்ளனர்.
ப்ரொமோவில் காட்டப்படும் காட்சிகளை பார்க்கும் போது இது கோடீஸ்வரன் நிகழ்ச்சியை போல் இருக்கும் என தெரிகிறது. போட்டியாளர்களுக்கு பணத்தை வாரி வழங்குவதாக இந்த கேம் ஷோ இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், எப்படியும் நீங்கள் பப்ளிக்கை வைத்து இதை நடத்த மாட்டீர்கள், ஏதாவது பிரபலத்தை வைத்து தான் நடத்துவீர்கள். அவர்கள் பணம் சம்பதிக்க தான் வழி செய்வீர்கள் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரியங்கா, மாகாபா காம்போ தொகுத்து வழங்கிய பல ஷோக்கள் செம ஹிட் ஆகி உள்ளன. இதனால் கண்டிப்பாக இந்த ஷோவும் ஹிட் ஆகி விடும். இந்த காம்போவில் மீண்டும் ஒரு புதிய ஷோவை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.