வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
நம் நாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா அமுத பெருவிழாவாக மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொண்டாட்டம் என்கிற பெயரில் சில இடங்களில் மூடத்தனமான விஷயங்களும் நடந்தேறின. அவற்றில் மிக முக்கியமானது விடுதலை போராட்ட வீரர்களை சாதிய ரீதியாக பிளவுபடுத்தி கொண்டாடியது என்று குறிப்பிடலாம்.
இந்தியர்களிடையே நிலவிய சாதிப்பிளவு தான் ஆங்கிலேயர்கள் இந்த தேசத்தை பல்லாண்டுகள் அடிமைப்படுத்தி வைத்ததற்கு மிக முக்கிய காரணமாக இருந்தன. அப்படிபட்ட ஆங்கிலேயர்களை விரட்டி, பல வீரர்கள் பல தியாகங்கள் செய்து சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் ஆகிவிட்டது. அப்படிபட்ட தியாகிகளின் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரை சேர்த்து சாதி சங்கங்கள் இன்றைய இளைய தலைமுறையினரை தவறான பாதையில் வழிநடத்துகின்றன.
தமிழக பள்ளிப்பாட புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களில் பின்னொட்டாக இருந்த சாதிப்பெயரை அதிமுக அரசு நீக்கியது. அச்செயலை மக்கள் பலர் வரவேற்றனர். அதேபோல விடுதலை போராட்ட வீரர் என்று அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்கள் எங்கெல்லோம் பயன்படுத்தப்படுகிறதோ அந்த இடங்களிலும் அவர்களுடைய சாதிப்பெயரை சேர்க்க கூடாது என்றும், விடுதலை போராட்ட வீரர்களின் புகழை சாதி சங்கங்கள் தங்களது செயல்பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அரசு வலியுறுத்த வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.