டெல்லி-டேராடூன் இடையிலான 210 கிலோ மீட்டர் தொலைவை இரண்டரை மணி நேரத்தில் கடக்கும் வகையில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் விரைவுச்சாலை ஆசியாவின் மிக நீளமான வனவிலங்குகள் வசிக்கக்கூடிய நெடுஞ்சாலையாக அமைய உள்ளது.
இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் வகையிலும், வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வகையிலும் நான்கு கட்டங்களாக கட்டப்பட்டு வரும் விரைவுச் சாலை, ராஜாஜி தேசிய பூங்கா வனப்பகுதிகளில் 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு, மேம்பால வடிவில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம், வனவிலங்குகள் நடமாட்டம் தடைபடாததோடு, அவை வாகனங்களில் அடிப்பட்டு இறப்பதும் தவிர்க்கப்படும்.