வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-கடந்த 2021ஆண்டில் நாடு முழுதும் நடந்த சாலை விபத்துகளில் 1.73 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருகி வரும் வாகனங்களால் சாலை விபத்துக்கள் அன்றாக சம்பவமாக பார்க்கப்படுகிறது. தவிர கவனக்குறைாக வாகனங்களை செலுத்துவதால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
கடந்த 2021 ஆண்டு மட்டும் நம் நாட்டில் நடந்த மொத்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4.22 லட்சம். இதில் 1.73 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.
சாலை விபத்து உயிரிழப்புகள் 2020ம் ஆண்டில் 1.20 லட்சமாகவும், அதற்கு முந்தைய 2019-ம் ஆண்டில் 1.36 லட்சமாகவும் பதிவானது.இவற்றில் 20121-ம் ஆண்டில் அதிகபட்சமாக உத்திரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 24,711 பேர் பலியாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 16,685 பேர் பலியாகியுள்ளனர். மூன்றாம் இடத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இங்கு 16,446 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement