”80% நீதிபதிகள், 95% பத்திரிகையாளர்கள் மது அருந்துகின்றனர்” – பப்பு யாதவ் குற்றச்சாட்டு

பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர்தான் அதிகளவில் மது அருந்துகின்றனர் என ஜன் அதிகார் கட்சியின் தலைவர் ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் தெரிவித்துள்ளார். பீகாரில் அமலில் உள்ள பூரணமதுவிலக்கு குறித்து அவர் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பப்பு யாதவ் தன்னுடைய பேட்டியில்,”‘வறண்ட மாநிலமான’ குஜராத்தில் மக்கள் இறக்கின்றனர். அதேசமயம் மதுவிற்பனை மூலம் டெல்லி அரசு தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 80% நீதிபதிகள், 90% அதிகாரவர்க்கத்தினர் மற்றும் 95% பத்திரிகையாளர்கள் மது அருந்துகின்றனர்” என்றார்.
முன்னதாக, பீகாரில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கையாளர்கள் கவலையில் உள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்து இருந்தார்.
image
’’மது தடையால் நிறைய பத்திரிகையாளர்கள் முதலமைச்சர் மீது கோபத்தில் உள்ளனர். இந்த மது தடை மாநிலத்திலுள்ள பெண்களின் கோரிக்கையால் அமல்படுத்தப்பட்டது. முதல்வர் தனது மக்களைப் பற்றி நினைப்பாரா அல்லது பத்திரிகையாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கமுடியாமல் தவிப்பதைப் பற்றி கவலைப்படுவாரா?’’ என்று ராஜீவ் ரஞ்சன் கேள்வி எழுப்பி இருந்தார்.
சிங்கின் இந்த கருத்து பாஜகவின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறது. மேலும் இது அடிக்கடி மதுபான கும்பலுடன் தொடர்பு இருப்பதை JD(U) கட்சி வெளிப்படுத்துகிறது என குற்றம் சாட்டியுள்ளது. இதுதவிர விலைவாசி உயர்வு மற்றும் உஜ்வாலா யோஜனா திட்டம் ஆகியவை குறித்தும் விமர்சித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“இது லாலன் சிங்கின் ஒரு சிறிய கருத்துதான். தனது கட்சிக்கும் மதுபான கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக சிங் அடிக்கடி குற்றம் சாட்டப்படுவதால் அவர் நிறைய கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டி இருக்கிறது” என்று பாஜக பீகார் செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த் அவருக்கு பதில் கருத்து தெரிவித்திருந்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.