90 தொகுதியிலும் போட்டி: ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஆவார் குலாம் நபி ஆசாத்..அடித்து சொல்லும் ஆதரவாளர்கள்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என கூறப்படும் நிலையில், அங்கு குலாம் நபி ஆசாத் தலைமையில் புதிய கட்சி அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் என்றும், இதில் வெற்றி பெற்று ஜம்மு காஷ்மீர் முதல்வராக குலாம் நபி ஆசாத் பதவியேற்பார் என்றும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் வெளியேறி வருகின்றனர்.

குறிப்பாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர முகமாக இருந்த ஜோதிர் ஆதித்ய சந்தியா தொடங்கி, கபில் சிபல், அமரிந்தர் சிங், அஸ்வினி குமார் என பல முக்கிய தலைவர்கள் காங்கிரஸில் இருந்து விலகினர்.

குலாம் நபி ஆசாத் விலகல்

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரானவரும், 50 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்தவருமான குலாம் நபி ஆசாத் திடீரென அக்கட்சியில் இருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள குலாம் நபி ஆசாத், சமீப காலமாக அக்கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். குலாம் நபி ஆசாத் காங்கிரசில் இருந்து வெளியேறிய சம்பவம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 ஜம்மு காஷ்மீரில் போட்டி

ஜம்மு காஷ்மீரில் போட்டி

இந்த விவகாரத்தை கையில் எடுத்து அக்கட்சியை பாஜக தலைவர்கள் வசைபாடி வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள குலாம் நபி ஆசாத் புதிதாக புதிய கட்சி தொடங்கப்போவதாக கூறப்பட்டது. தற்போது அதை மெய்ப்பிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீரில் அவரது ஆதரவாளர்கள் கூடியுள்ளனர். காஷ்மீரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 சரூரியின் தலைமையில்

சரூரியின் தலைமையில்

மேலும் அந்த தேர்தலுக்குள் புதிய கட்சியை தொடங்கி, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தற்போதே அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸில் இருந்து கடந்த 26-ம் தேதி ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத் செப்டம்பர் 4-ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் வருவதற்கு முன்பு ஜம்மு காஷ்மீரின் முன்னாள் அமைச்சருமான ஜிஎம் சரூரியின் தலைமையில் குலாம் நபி ஆசாத் ஆதரவாளர்கள் கூடியுள்ளனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஹாஜி அப்துல் ரஷீத் மற்றும் முகமது அமீன் பட், குல்சார் அகமது வானி, சவுத்ரி முகமது அக்ரம் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஜம்மு காஷ்மீரின் அடுத்த முதல்வர் குலாம் நபி ஆசாத்

ஜம்மு காஷ்மீரின் அடுத்த முதல்வர் குலாம் நபி ஆசாத்

இதில் முன்னாள் அட்வகேட் ஜெனரல் முகமது அஸ்லம் கோனி உள்பட பலர் குலாம் நபி ஆசாத் தலைமையுடன் சேர்ந்தனர். ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 90 தொகுதியிலும் குலாம் நபி ஆசாத் தலைமையிலான புதிய கட்சி போட்டியிடும் என்றும், அதில் வெற்றி பெற்றும் ஜம்மு-காஷ்மீரின் அடுத்த முதல்வராக குலாம் நபி ஆசாத் வருவார் என்று நாங்கள் நம்புகிறோம்” என ஜிஎம் சரூரி கூறினார். மேலும் அவர் கூறுகையில், ”குலாம் நபி ஆசாத் தலைமையிலான புதிய கட்சியின் கதவுகள் அனைத்து மதச்சார்பற்ற எண்ணம் கொண்ட மக்களுக்கும், கட்சிகளுக்கும் திறந்திருக்கும்” என்றார்.

 ஆதரவு கடிதம்

ஆதரவு கடிதம்

இது தொடர்பாக ஜிஎம் சரூரி கூறுகையில், தொழில் அதிபர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், வார்டு தலைவர்கள் என காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நாங்கள் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக காங்கிரசில் இருந்து விலகியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஆதரவு கடிதமும் அனுப்பியுள்ளனர்” என்றார்.

முக்கிய தலைவர்கள் ஆதரவு

முக்கிய தலைவர்கள் ஆதரவு

தொடர்ந்து அவர் கூறுகையில், குலாம் நபி ஆசாத் புதிய கட்சி தொடங்கியதும், வரும் நாட்களில் நாடும் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் அவருக்கு ஆதரவு தருவார்கள். குலாம் நபி ஆசாத் கூட்டணியில் அங்கம் வகித்து கூட்டணியை பலப்படுத்துவார்கள் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். வருகிற நவம்பர் மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் தேதி தொடங்க்குவதற்கான வாய்ப்புள்ளது” என்றார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.