artemis 1 moon mission: நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் நாசாவுக்கு பின்னடைவு!

50 ஆண்டுகளுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ராங்கை நிலவுக்கு அனுப்பி ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த அமெரிக்கா, தற்போது மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதர்களை இறக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, ஆர்ட்டெமிஸ் -1 ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவ நாசா திட்டமிடப்பட்டிருந்தது. புளோரிடா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆர்டெமிஸ் -1 நிலவுக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதற்கான கவுன்ட் டவுனும் சனிக்கிழமை தொடங்கி நிலையில், ராக்கெட்டை ஏவும் திட்டம் கைவிடப்படுவதாக கடைசி நிமிடத்தில் நாசா அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் மின் கட்டண உயர்வு…! – தனியார்மயத்தால் ஏற்பட்ட பாதிப்பு..?

ராக்கெட்டின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆர்ட்டெமிஸ் -1 ஏவும் பணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், இயந்திர கோளாறுக்கான காரணம் கண்டறியப்பட்டு செப்டம்பர் 2 அல்லது 5 ஆம் தேதி, ராக்கெட்டை மீண்டும் நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

மனிதர்களை போன்று பொம்மைகளை சுமந்து நிலவுக்கு சென்று, மீண்டும் பூமிக்கு திரும்பும்படி ஆர்ட்டெமிஸ் -1 திட்டம் செயல்படுத்தபட இருந்ததாகவும், நிலவின் ஈர்ப்புவிசையை பயன்படுத்தி பூமிக்கு திரும்பும் விதத்தில் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டிருந்ததாகவும் நாசா கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.