சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் தீபாவளி முதல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் வருடாந்திர கூட்டத்தில் அறிவித்துள்ளது.
2023ம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் 5ஜி இணைய சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளது.
இந்த 5ஜி சேவையானது, 4ஜி சேவையினை விட பல மடங்கு வேகத்தில் தரவுகளை வேகமாக பதிவு செய்ய முடியும். பதிவிறக்கம் முடியும் என்பதால் இது பெருத்த எதிர்பார்ப்பினை தூண்டியுள்ளது.
புதிய ஜிகா தொழிற்சாலை அமைக்கும் ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி மாஸ் திட்டம்..!
இணைய சாதனங்கள் அதிகரிக்கும்
இதற்கிடையில் இந்த வருடாந்திர கூட்டத்தில் பேசிய ஆகாஷ் அம்பானி, இந்தியாவில் 5ஜி சேவை அதிகரிக்கும்போது, தற்போதைய 800 மில்லியன் இணைய சேவை சாதனங்கள், இன்னும் ஒரு வருடத்தில் 1.5 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அல்ட்ரா மொபைல் போன் தயாரிப்பு
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படுத்தும் வகையில் அல்ட்ரா மொபைல் போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றது என ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.
ஜியோ 5ஜி
ஜியோ 5ஜி சேவையானது இன்னும் அற்புதமான ஒரு விஷயம். இது அதிவேக நிலையான பிராட்பேண்ட் சேவை என்று ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.
ஜியோ 5ஜி மூலம் நாடு முழுவதும் 5ஜி உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, அதன் மூலம் உயர்தர கல்வி சேவையினை வழங்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
வேகமில்லை
5ஜி பிராட்பேண்ட் சேவை என்பது வேகத்தினை கூட்டுகின்றது. இதன் மூலம் தாமத்தினை தவிர்க்க முடியும். நமது நாட்டில் பல நெட்வொர்க்குகள் இருந்தாலும், ஒன்றில் கூட 1 Gbps வேகம் பெறுவதில்லை என ஆகாஷ் அம்பானி சுட்டிக் காட்டியுள்ளார்.
5ஜிக்காக மாபெரும் கூட்டணி
முன்னதாக முகேஷ் அம்பானி பேசும்போது, மேட் இன் இந்தியா 5ஜி கூட்டணியில் மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட், எரிக்சன், பேஸ்புக் ஆகிய நிறுவனத்துடன் ரிலையன்ஸ் இணைந்து பணியாற்றியது. அடுத்ததாக குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருக்கிறது என்றும் கூறியிருந்தார். மொத்தத்தில் இந்த மாபெரும் கூட்டணி 5ஜி சேவை இன்னும் மேம்படும் எனலாம்.
reliance agm 2022 : Akash Ambani predicts that the introduction of 5G will increase the number of internet devices
reliance agm 2022 : Akash Ambani predicts that the introduction of 5G will increase the number of internet devices/reliance agm 2022: 5ஜி குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த ஆகாஷ் அம்பானி.. !