அன்னா ஹசாரே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீங்கள் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். ஏனென்றால் உங்கள் அரசாங்கத்தின் மதுபானக் கொள்கை குறித்த சமீபத்திய செய்திகளால் நான் வேதனைப்படுகிறேன். “உங்கள் ‘ஸ்வராஜ்’ புத்தகத்தில் மதுபானக் கொள்கைகள் பற்றி முக்கியமான விஷயங்களை எழுதியிருந்தீர்கள். அதற்கு நான் முன்னுரை எழுதிக் கொடுத்தேன்.
அதில், மக்களின் சம்மதம் இல்லாமல் அந்தப் பகுதியில் மதுபானக் கடைகளே திறக்கக் கூடாது எனக் கூறியிருந்தீர்கள். முதலமைச்சரான பிறகு அதையெல்லாம் மறந்துவிட்டீர்கள். உங்கள் ஆம் ஆத்மி கட்சி வேறு எந்தக் கட்சியிலிருந்தும் வித்தியாசமாக இல்லை. நீங்கள் முதல்வரான பிறகு லோக்பால், லோக் ஆயுக்தாவை முழுவதுமாக மறந்துவிட்டீர்கள்.
உங்கள் பேச்சும், செயலும் வேறு வேறு என்பதைக் காட்ட இதுவே போதும். மதுவைப் போல் அதிகாரமும் போதை தரும். அதிகார போதை உங்கள் கண்களை மறைக்கிறது என்றும் அன்னா ஹசாரே கூறியுள்ளார். மதுபானக் கொள்கை, சிபிஐ ரெய்டின் பின்னணியில் தற்போது அன்னா ஹசாரேவின் கடிதமும் இணைந்துள்ளது.
Anna Hazare writes to Delhi CM Kejriwal over New Liquor Policy
“Had expected a similar policy(like Maharashtra’s). But you didn’t do it.People seem to be trapped in a circle of money for power&power for money. It doesn’t suit a party that emerged from a major movement,”he writes pic.twitter.com/4yTvc0XI5K
— ANI (@ANI) August 30, 2022
ஊழலை ஒழிக்க லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி அன்னா ஹசாரே தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, அரவிந்த் கெஜ்ரிவாலும் அவருடன் இணைந்து செயல்பட்டார். தீவிர அரசியல் ஈடுபடாத அன்னா ஹசாரே, தொடக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளித்த நிலையில், ஆனால், ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்த பின்னர் அன்னா ஹசாரே அக்கட்சியை பலமுறை விமர்சித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ