புதுடில்லி :அன்னிய முதலீட்டாளர்கள், இந்த மாதத்தில் மட்டும், இந்திய நிதி சந்தைகளில், கிட்டத்தட்ட 60 ஆயிரத்து 800 கோடி ரூபாயை முதலீடு செய்து உள்ளனர்.
இந்தியாவின் வளர்ச்சி, பணவீக்கம் குறித்த பார்வை, உலக பொருளாதாரங்களோடு ஒப்பிடும்போது சிறப்பாக இருப்பது போன்ற காரணங்களால், முதலீட்டை அதிகரித்துள்ளனர்.
சீனா உள்ளிட்ட பிற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா சிறந்த வாய்ப்புள்ள நாடாக இருப்பதால், அன்னிய முதலீட்டாளர்கள், மீண்டும் அதிக முதலீட்டை மேற்கொண்டுள்ளனர். சீனாவின் கட்டுமான துறை சரிவு காரணமாக, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, எஸ்.பி.ஐ., தலைமை பொருளாதார ஆலோசகர் சவும்யா காந்தி கோஷ் கூறியதாவது:உலகளவில் மாற்று இல்லை என்ற நிலையை இந்தியா அனுபவித்து வருவது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் உலக நாடுகள் அனைத்தும் பிரச்னைகளை எதிர்கொள்கின்றன.நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி மற்றும் பணவீக்க கண்ணோட்டத்தில், இந்தியா சிறப்பான இடத்தில் உள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement