ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த வரம்புகளை நீக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு பிறகு விமான போக்குவரத்துக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட்31-ம் தேதி முதல் உள்நாட்டு விமான பயண கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த வரம்பை நீக்க உள்ளதாக அண்மையில் விமான போக்குவரத்துத் துறை தெரிவித்து இருந்தது.
அது என்ன விமான டிக்கெட் கட்டணம் வரம்பு? எப்படி விமான டிக்கெட் கட்டணம் விலை குறையும் என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
ரூ.9ல் விமான டிக்கெட்டா.. நம்மூரில் ஒரு குச்சி ஐஸ் கூட வாங்க முடியாதே..!
விமான டிக்கெட் கட்டணம் வரம்பு
எடுத்துக்காட்டுக்கு, சிறு விமான நிறுவனங்கள், பெரும் விமான நிறுவனங்கள் என யாரும் பாதிக்கப்படாத வகையில் குறைந்தது 2900 முதல் 8,800 ரூபாய்க்குள் விமான டிக்கெட் கட்டணத்தை நிர்ணயத்துக் கொள்ளாலாம் என மே 2020-ம் தேதி உத்தரவிடப்பட்டு இருந்தது.
வரம்புகள் நீக்கம்
முதலில் இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் ஒரு காலியிடம் வேண்டும் என்ற முடிவைச் சென்ற ஆண்டு விமான போக்குவரத்துத் துறை நீக்கியது. ஆனால் ஆனால் இந்த கட்டணம் வரம்பு மட்டும் நீக்கப்படாமல் இருந்தது. இப்போது அது நீக்கப்பட்டுள்ளதால் விரைவில் விமான நிறுவனங்கள் கூடுதல் வாடிக்கையாளர்களை ஈர்க்க விமான டிக்கெட் கட்டணங்களை தங்களுக்கு ஏற்றார் போல சலுகைகளுடன் அறிவிக்க வாய்ப்புள்ளது.
அமைச்சர் கருத்து
இது குறித்து விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா எம்.சிந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தினசரி விமான போக்குவரத்துத் தேவை, விமான எரிபொருள் கட்டணம் போன்றவற்றை ஆய்வு செய்து விமான டிக்கெட் கட்டணம் வரம்பு நீக்கம் குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்துத் துறை வேகமாக வளர்ச்சி அடையும்.” என தெரிவித்துள்ளார்.
பயணிகள் எதிர்பார்ப்பு
கொரோனாவுக்கு முன்பு 1000 ரூபாய்க்குள் எல்லாம் டிக்கெட் கட்டணங்களை விமான நிறுவனங்கள் அறிவித்து வந்தன. இப்போது மீண்டும் இது போன்ற அறிவிப்புகள் வெளிவருமா என விமான பயணிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.
Domestic Flight Tickets May Cheaper From August 31 In India
அகஸ்ட் 31-ம் தேதி முந்தல் விமான டிக்கெட் கட்டணம் குறையுமா? |Domestic FLight Tickets May Cheaper From August 31 In India