ஆசிய கோப்பையில் 7-வது முறையாக பங்கேற்று ரோகித் சர்மா புதிய சாதனை

புதுடெல்லி,

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2008-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டார். அது முதல் தொடர்ந்து ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்று வரும் அவருக்கு இது 7-வது ஆசிய கோப்பை போட்டியாகும்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடியதன் மூலம் 7 ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடிய முதல் இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். டோனி, தெண்டுல்கர் ஆகியோர் 6 ஆசிய கோப்பை போட்டிகளில் ஆடி இருக்கின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா 20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 133 ஆட்டங்களில் ஆடி 4 சதம் 27 அரைசதம் உள்பட 3,449 ரன்கள் எடுத்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.