ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் என்ற ரீதியில் அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றார்;.
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் புதிய முன் மொழிவுகள்:
* 2021ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.2% ஆக உள்ள அரசாங்க வருமானத்தை 2025க்குள் 15%ஆக உயர்த்த எதிர்பார்க்கப்படுகிறது.
* அக்டோபர் 1 முதல் பெருமதி சேர்க்கப்ட்ட வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும்.
*கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பல வரித் திட்டங்கள் அக்டோபர் முதல் அமல்படுத்தப்படும்.
*18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
*அரசு மற்றும் அரசு சார்பு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக குறைக்கப்படும். தற்போது பணியில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் டிசம்பர் 31ம் திகதி ஓய்வு பெற வேண்டும்.