கோடிக்கணக்கான ரூபாவை செலவழித்து வெளிநாட்டு பயணம் செல்ல தயாரான இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் ஏழு பேரின் பயணம் இடைநிறுத்தப்பட்டதாக தேசிய விளையாட்டு சபையின் தலைவரும் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கண்டி, மல்வத்து அஸ்கிரிய மகநாயக்க தேரரை தரிசித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘கிரிக்கெட் நிறுவனத்தைச் சேர்ந்த 7 அதிகாரிகள் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்ல அனுமதி கோரியிருந்தனர். அங்கு, அவர்களுக்கு Business Class Flight வகுப்பில் பயணம் செய்யக்கூடிய விமான டிக்கெட்டுக்கள் மற்றும் அந்நாடுகளில் அவர்கள் தங்குவதற்கு உயர்மட்ட ஹோட்டல்களில் தங்குவதற்கான வசதிகளுடன் நாள் ஒன்றுக்கு 650 டொலர்கள் செலுத்தப்பட இருந்தது. விளையாட்டு கவுன்சில் என்ற வகையில் நாங்கள் அதை எதிர்த்தோம். இவற்றைத் தடுத்து நிறுத்தும்போது நமக்குப் பிரச்சனைகள் வரும். சரியானதைச் செய்யவே இந்த பொறுப்பை ஏற்றேன்.’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.