இளவரசர் ஹரி தனது தந்தையை இழந்துவிட்டதாக உணர்கிறார் என்று மேகன் மார்க்கல் கூறியுள்ளார்.
மேலும், எதையும் வெளியில் சொல்ல தனக்கு இப்போது சுதந்திரம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அரச குடும்பத்தை விட்டு வெளியேறிய பிறகு இளவரசர் ஹரி தனது தந்தை இளவரசர் சார்லஸை இழந்துவிட்டதாக உணர்கிறார் என்று அவரது மனைவியும் சசெக்ஸின் இளவரசியான மேகன் மார்க்கல் திங்களன்று கூறியுள்ளார்.
மேலும் அரச குடும்பத்துடனான விரிசலுக்குப் பிறகு, எதையும் வெளிப்படையாக சொல்ல சுதந்திரம் இருப்பதாகவும், அதற்காக எதிலும் கையெழுத்து போடவேண்டிய அவசியமும் இல்லை என மேகன் கூறியுள்ளார்.
அமெரிக்க இதழான The Cut-ன் நேர்காணலில் பேசிய அவர், “ஹாரி என்னிடம் ‘இந்த செயல்பாட்டில் நான் என் அப்பாவை இழந்தேன், அது எனக்கு இருந்தது போல் அவர்களுக்கு இருக்க வேண்டியதில்லை, ஆனால் அது அவருடைய முடிவு” என்று கூறியதாக, கசிந்த கடிதம் பற்றிய சர்ச்சையைப் பற்றி மேகன் கூறினார்.
“நான் பேசுவதைத் தடுக்கும் எதிலும் கையெழுத்திட வேண்டியதில்லை. எனது முழு அனுபவத்தைப் பற்றியும் நான் பேசலாம் மற்றும் வேண்டாம் என்று தேர்வு செய்யலாம்” என்று மேகன் மார்க்கல் கூறினார்.
இந்த ஆண்டு மார்ச் 29-ஆம் திகதி நடைபெற்ற அவரது தாத்தா இளவரசர் பிலிப்பின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்லே இருவரும் கலந்து கொள்ளவில்லை. இளவரசர் ஹரியின் முடிவு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தையும் வருத்தப்படுத்தியிருக்கலாம்.
குடும்பத்தினர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதே நேரத்தில், இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் ஆகியோர் கலிபோர்னியாவில் தங்கியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பிரித்தானியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பிரித்தானிய உள்துறை அலுவலகத்துடன் இளவரசர் ஹரி சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் இது நிகழ்ந்தது.