உலகின் 3வது பெரும் பணக்காரர் ஆனார் கௌதம் அதானி.. முதல் முறையாக ஒரு இந்தியர்..!

கௌதம் அதானி 5 வருடங்களுக்கு முன்பு இவருடைய பெயரே வெளிநாடுகளில் யாருக்கும் தெரியாது, ஆனால் இன்று உலகளவில் பிரபலமாகியுள்ளார்.

அனைத்திற்கும் காரணம் அதானி குழுமத்தின் பிரம்மாண்டமான வளர்ச்சி மூலம் இவரது சொத்து மதிப்பு திடீரென உச்சத்தைத் தொட்டது தான். இந்த நிலையில் இன்று கௌதம் அதானி இதுவரையில் எந்த ஒரு இந்தியரும் அடைந்திடாத வளர்ச்சியை எட்டியுள்ளார்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 3வது இடத்தைப் பிடித்துப் புதிய சாதனை படைத்துள்ளார்.

அனல் மின்நிலையத்தை வாங்கும் முகேஷ் அம்பானி.. சும்மா இருப்பாரா அதானி..?

கௌதம் அதானி

கௌதம் அதானி

கௌதம் அதானி கல்லூரி படிப்பை முடித்த உடனே முதலில் வர்த்தகம் செய்ய வேண்டும் என விரும்பி நுழைந்த ஒரு துறை என்றால் அது வைர வர்த்தகம் தான்.

வர்த்தகச் சாம்ராஜ்ஜியம்

வர்த்தகச் சாம்ராஜ்ஜியம்

ஆனால் பின்னாளில் நிலக்கரி-யை தேர்வு செய்து இன்று இந்தியாவின் முன்னணி வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார். கடந்த 5 வருடத்தில் மின்சாரம் முதல் எரிவாயு வரை.. விமான நிலையம் முதல் துறைமுகம் வரை எனப் பல துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளார்.

3வது இடம்
 

3வது இடம்

இந்தத் தடாலடி வளர்ச்சியின் மூலம் முதல் இந்தியராகக் கௌதம் அதானி ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் பட்டியலில் உலகளவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரையில் இப்பட்டியலில் ஆசியாவில் இருந்து முன்னோடியாக இருந்த முகேஷ் அம்பானி, சீனாவின் அலிபாபா ஜாக் மா-ஆல் எட்ட முடியாத இடம் இது.

ப்ளூம்பெர்க் இன்டெக்ஸ் தரவுகள்

ப்ளூம்பெர்க் இன்டெக்ஸ் தரவுகள்

ப்ளூம்பெர்க் இன்டெக்ஸ் தரவுகள் படி கௌதம் அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் உய்ட்டன் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் இரண்டு இடத்தில் டெஸ்லா-வின் எலான் மஸ்க், அமேஸானின் ஜெப் பெசோஸ் ஆகியோர் உள்ளனர்.

போர்ப்ஸ் பட்டியல்

போர்ப்ஸ் பட்டியல்

ஆனால் போர்ப்ஸ் பட்டியலில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 143.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 4வது இடத்தில் தான் உள்ளார். உலகப் பணக்காரர்கள் சொத்து மதிப்பை கணக்கிடும் முறையில் வித்தியாசம் இருக்கும் காரணத்தால் இடங்கள் வேறுபடுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gautam Adani Overtakes Bernard Arnault To Become World’s Third Richest Person; The First Asian to do This

‘Gautam Adani’ – World’s Third Richest Person (உலகின் 3வது பெரும் பணக்காரர் ஆனார் கௌதம் அதானி): கௌதம் அதானி ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் பட்டியலில் உலகளவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரையில் இப்பட்டியலில் ஆசியாவில் இருந்து முன்னோடியாக இருந்த முகேஷ் அம்பானி, சீனாவின் அலிபாபா ஜாக் மா-ஆல் எட்ட முடியாத இடம் இது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.