உலகின் 7வது பணக்காரருக்கு இன்று பிறந்த நாள்.. வாரன் பஃபெட் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் சில!

அமெரிக்காவின் பிரபல முதலீட்டாளரும், தொழிலதிபருமான வாரன் பஃபெட், பங்கு சந்தையின் தந்தை என்று பாசமாக அழைக்கப்படுகிறார். இவரின் 92வது பிறந்த நாளான இன்று, அவரை பற்றிய சுவாரஸ்யமான சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

பங்கு சந்தையில் முதலீடு செய்ய நினைப்போருக்கு, இன்றும் முக்கிய ரோல் மாடலாக உள்ளவர் வாரன் பஃபெட் தான்.

பெர்க்ஷயர் ஹாத்வே என்ற நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வாரன் பஃபெட், இன்று உலகின் 7வது பணக்காரர் ஆவார்.

5G முதல் அரிசு மாவு வரை.. 3 புதிய வர்த்தகம்.. ரிலையன்ஸ் மாஸ்டர் பிளான்..!

 யார் இந்த வாரன் பஃபெட்?

யார் இந்த வாரன் பஃபெட்?

வாரன் பஃபெட்டின் முழுப் பெயர் வாரன் எட்வர்ட் பஃபெட். இவர் ஆகஸ்ட் 30, 1930ம் ஆண்டு ஒமாஹா நெப்ராஸ்காவில் பிறந்தவர். இவரது தந்தை ஹோவர்ட் பஃபெட். இவர் ஒரு பங்கு தரகர். வாரன் பஃபெட்டின் தந்தைக்கு அவர் குழந்தையாக இருக்கும்போது அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக வணிகம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் குழந்தையாக இருக்கும்போதே வறுமையில் குடும்பம் தள்ளப்பட்டுள்ளது. எனவே, வாரன் பஃபெட்டின் குழந்தைப் பருவம் ஏழ்மையிலேயே கழிந்தது.

 வறுமையான குடும்பம்

வறுமையான குடும்பம்

ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான வாரன், இளம் வயதிலேயே வறுமையால் தவித்த குடும்பத்தில் பிறந்தவர். குடும்பத்திற்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் பேப்பர் டெலிவரி செய்யும் டெலிவரி பாயாக 1944ல் இருந்தவர். புத்தகங்கள் விற்பனையும் செய்துள்ளார். ஆனால் இன்று இவரின் இன்றைய சொத்து மதிப்பு 100.2 பில்லியன் டாலராகும்.

 11 வயதில் முதலீடு ஆரம்பம்
 

11 வயதில் முதலீடு ஆரம்பம்

தனது 11 வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்தவர், சிறு வயதில் இருந்தே பங்கு சந்தையிலும் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளார். தனது 13 வயதில் வருமான வரி தாக்கல் செய்துள்ளார். 1958ல் வெறும் 31,500 டாலருக்கு வாங்கிய வீட்டில் தான் இன்று வரையில் வசித்து வருகின்றார். இதுவே இவரின் எளிமைக்கு சாட்சி எனலாம்.

 92 வயது இளைஞர்

92 வயது இளைஞர்

சிறுவயதில் இருந்தே பங்கு சந்தையில் தனது முதலீட்டினை செய்ய ஆரம்பித்த இந்த 92 வயது இளைஞர், இன்றும் முதலீட்டினை செய்து வருகின்றார். வெற்றியும் பெற்று வருகின்றார். பங்கு சந்தை குறித்து இவர் எழுதிய புத்தகங்கள், சில முக்கிய அம்சங்கள் இன்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

உலகின் பிரபலமான ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் நிராகரிக்கப்பட்ட வாரன், அவரின் சொந்த முயற்சியால் இன்று ஏராளமான மாணவர்களுக்கு வாழ்வளிக்க உதவி புரிந்து வருகின்றார்.

 

 வாரன் பஃபெட்டின் சிறந்த பொன்மொழிகள்

வாரன் பஃபெட்டின் சிறந்த பொன்மொழிகள்

 

  • எப்போதும் ஒரே வருமானத்தை நம்பியிருக்காதே. இரண்டாவது வருமானத்தையும் தயாராக வைத்துக் கொள்.
  • நாம் மற்றவர்களை காட்டிலும் புத்திசாலியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மற்றவர்களை காட்டிலும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்.
  • உங்களால் புரிந்து கொள்ள முடியாத வணிகத்தில் எப்போதும் முதலீடு செய்யாதீர்கள்.
  • நீங்கள் என்ன செலுத்துகிறீர்களோ அது தான் விலை. நீங்கள் பெறுவது தான் மதிப்பு
  • விதி நம்பர் 1: ஒரு போதும் பணத்தை இழக்காதீர்கள் விதி நம்பர் 2: விதிகளை ஒரு போது மறக்காதீர்கள்
  • மற்றவர்கள் பயன்ப்படும்போது நீங்கள் பேராசைப்பட வேண்டும்,. மற்றவர்கள் பேராசை கொள்ளும்போது நீங்கள் பயப்பட முயற்சி செய்ய வேண்டும்.
  • தேவையில்லாத பொருட்களை வாங்கிக் கொண்டே இருந்தால், ஒரு நாள் தேவையான பொருளை இழக்க நேரிடும்.

எது எப்படியோ 92 இளைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை நாமும் தெரிவித்துக் கொள்வோமே.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Warren Buffett birthday: How much is his net worth? What are his best quotes?

Warren Buffett birthday: How much is his net worth? What are his best quotes?/உலகின் 7வது பணக்காரருக்கு இன்று பிறந்த நாள்.. வாரன் பஃபெட் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் சில!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.