அதிமுக அணிகளாக பிரிந்து உட்கட்சி பூசலால் சலசலத்து கொண்டிருக்கும் நிலையில்,
சைலண்டாக பல சம்பவங்களை செய்து கொண்டிருப்பதாக பேசப்பட்டு வருகிறது. கட்சியை ஒட்டுமொத்தமாக தனது கைக்குள் கொண்டு வரும் திட்டமா? இல்லை சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வந்து தலைமை பீடத்தை அலங்கரிக்கும் வியூகமா? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
மறுபுறம்
தரப்பு சட்டப் போராட்டத்தை கையிலெடுத்துள்ளது. தங்களுக்கு எதிரான எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் விடாப்பிடியாக போராடி வெற்றி பெறுவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகின்றனர். இந்த சூழலில் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வத்தை கழகத்தினர் பலரும் நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்து கொண்டவர் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஓபிஎஸ்சை இன்று மாலை சந்தித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சொல் புத்தியும் கிடையாது. சுய புத்தியும் கிடையாது. கள்ள ஓட்டு போட்டதாக திமுகவினரை ஏன் கட்டி வைத்து அடிக்க வேண்டும்.
சமூக பொறுப்புள்ள ஒருவர் காவல்துறையினரிடம் தான் பிடித்து கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு பொது இடத்தில் வைத்து அடித்து பின்னர் காவல்துறையினரிடம் பிடித்து கொடுத்து விளம்பரம் தேடிக் கொண்டவர் ஜெயக்குமார். அந்த வழக்கில் கைதாகி சிறை சென்ற பின் வெளியே வந்தவர், நாட்டுக்கே விடுதலை வாங்கித் தந்த தியாகி போல மலர் மாலை அணிந்து ஊர்வலமாக சென்றார்.
அடுத்து ஆர்.பி.உதயகுமார். இவர் ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டுகிறேன் எனச் சொல்லி தனது தந்தையின் சமாதியை அந்த இடத்தில் எழுப்பியவர். எல்லாம் பொய். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு முதல் காரணமே இவர் தான். ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் இருவரும் ஓ.பி.எஸ் குறித்து பேசுவதற்கு தகுதி அற்றவர்கள். இவர்கள் கொடுக்கும் நற்சான்றிதழ் கூட ஓ.பி.எஸ்-க்கு தேவையில்லை.
பதவியை ராஜினாமா செய்ய நான் தயார்; இபிஎஸ் தயாரா? ஓபிஎஸ் சவால்!
ஏனெனில் “நிகழ்கால பரதன்” என்று ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டதாக குறிப்பிட்டார். மத்திய பாஜக அரசின் அமைச்சரவையில் அதிமுக எம்.பி ரவிந்திரநாத் இடம்பெறுவது பிடிக்காமல் அதற்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயக்குமார். தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை.
எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க வேண்டும் என்று வேலை செய்ததாக குற்றம்சாட்டினார். மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அறிக்கைக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.