இந்தியாவில் IKEA நிறுவனம் ஒரு சில இடங்களில் தனது பர்னிச்சர் சில்லரை விற்பனை கடைகளை நடத்தி வருகிறது என்பதும், இந்த கடைகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் IKEA நிறுவனம் அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறது என்றும், இதுகுறித்த செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தனது மணிப்பூர் மனைவியிடம் மட்டும் IKEA நிறுவனத்தின் ஊழியர்கள் சோதனை செய்ததாக புகார் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டாடா ஸ்டீல் எடுத்த தீடீர் முடிவு.. இங்கிலாந்து என்ன முடிவெடுக்கப் போகிறது?
IKEA ஐதராபாத்
IKEA ஐதராபாத் கடையில் உள்ள ஊழியர்கள் தனது மனைவியிடம் இனவெறியோடு நடந்து கொண்டதாகவும், மற்ற வாடிக்கையாளர்களிடம் சோதனை செய்யாத நிலையில் தனது மனைவியிடம் மட்டும் அவர் வாங்கிய பொருள்களை சோதனை செய்ததாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் மூத்த பத்திரிகையாளர் நிதின் சேத்தி தெரிவித்துள்ளார்.
இனவெறி
இந்த சமூக ஊடக பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இனவெறியுடன் நடந்து கொண்ட IKEA நிறுவனத்தின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
சோதனை
மூத்த பத்திரிகையாளர் நிதின் சேத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மணிப்பூரை சேர்ந்த எனது மனைவி ஐதராபாத் IKEA கடைக்கு சென்று ஒரு சில பொருட்களை வாங்கினார். அப்போது அவர் பொருட்களுக்கான பணத்தை கொடுத்து விட்டு வெளியே வரும்போது சோதனை செய்யப்பட்டார். அவருக்கு முன்பும் அவருக்குப் பின்பும் உள்ள எந்த வாடிக்கையாளரும் சோதனை செய்யப்படாத நிலையில் IKEA ஊழியர்கள் எனது மனைவியை மட்டும் சோதனை செய்தது இனவெறியாகவே பார்க்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஊழியர்கள்
எனது மனைவியின் ஷாப்பிங் பொருட்களை சரி பார்த்த ஊழியர்கள் அவரை பார்த்து ஏளனமாக சிரித்ததாகவும், இது ஊழியர்களின் இனவெறி தன்மையை வெளிப்படையாக காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
IKEA விளக்கம்
இந்த நிலையில் IKEA நிறுவனத்தின் நிர்வாகம், நிதின் சேத் அவர்களின் புகாருக்கு விளக்கம் அளித்துள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் பொருட்களை வாங்கி விட்டு செக் அவுட் செய்யும்போது தனித்தனியாக சோதனை செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும் எங்கள் நிறுவன ஊழியர்கள் யாரும் இனவெறியுடன் செயல்படவில்லை என்றும் அத்தகைய நடத்தையை எங்கள் நிறுவனம் ஒருபோதும் ஆதரிக்காது என்றும் தெரிவித்துள்ளது.
சமத்துவம்
மேலும் சமத்துவம் என்பது மனித உரிமை என்று நாங்கள் நம்புகின்றோம். அனைத்து வகையான இனவெறி மற்றும் தவறான எண்ணங்களை நாங்கள் கண்டிக்கின்றோம். பில்லிங் நெறிமுறையில் உங்கள் மனைவிக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம் என்றும் அந்த விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஊழியரும் பொருள்களை வாங்கி விட்டு வெளியே செல்லும்போது இறுதியாக சரிபார்க்கப்படுவார்கள் என்றும் பொருள்களை ஸ்கேன் செய்து பார்ப்பது என்பது ஒரு சகஜமான நடைமுறை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சிலர் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாகவும் சிலர் எதிர்ப்புகளை பதிவு செய்தும் வருகின்றனர்.
முதலமைச்சர் மகன் கண்டனம்
இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகனும் தெலுங்கானா அமைச்சருமான கேடி ராமராவ் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகவும் மோசமான செயல் என்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் உடனடியாக IKEA நிறுவனம் சம்பந்தப்பட்ட நபரிடம் மன்னிப்பு கேட்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள்
மேலும் வாடிக்கையாளர்கள் தான் ஒவ்வொரு நிறுவனத்தின் கடவுள் என்றும், அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும், அதற்காக உங்கள் நிறுவன ஊழியர்களுக்கு பயிற்சி அளியுங்கள் என்றும், இந்த தவறை விரைவில் நீங்கள் திருத்திக் கொள்வீர்கள் என நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
IKEA Hyderabad Accused Of Racism Against Manipuri Customer, Store Responds After Public Outrage
IKEA Hyderabad Accused Of Racism Against Manipuri Customer, Store Responds After Public Outrage | எனது மனைவியை மட்டும் சோதனை செய்தார்கள்.. IKEA மீது புகார் கூறிய பத்திரிகையாளர்!