என்னது.. 30 எம்எல்ஏக்களா?; எடப்பாடிக்கு ஷாக் தரும் திமுக!

அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி ஒரு புறமும்,

மறு புறமும், கோதாவில் குதித்து உள்ளனர். இதனையொட்டி கட்சிக்குள் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

இந்த களேபரத்துக்கு இடையே பெருவாரியான பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டே நீக்கினார். இது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்சுக்கு ஆதரவாகவே வெளியானது. இதை முதற்கட்ட வெற்றியாகவே கருதும் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளனர்.

அதே சமயம் அதிமுக வழக்கில் தனி நீதிபதி தந்த தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கிலும் எடப்பாடி பழனிசாமி பின்னடைவையே சந்திப்பார் என கூறப்படுகிறது.

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காய்களை நகர்த்துவதாக தகவல் வெளியானபடி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் முக்கிய நிர்வாகிகள் பலரும் இப்போதே சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஏற்று முகாம் மாறும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவுவதால் எடப்பாடி பழனிசாமி கவலையில் ஆழ்ந்துள்ளார். இதனால் அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த சூழலில் இருக்கிற பிரச்சனை போதாதென, ‘விடியா அரசு.. விடியா அரசு’ என்று அறிக்கைக்கு அறிக்கை எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கொத்தி கிளறி வருகிறார்.

இதனால் டென்ஷன் ஆகியிருக்கும் திமுக தலைமை எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக ஆஃப் செய்ய திட்டமிட்டு தனக்கே உரிய ராஜதந்திரத்தில் இறங்கி இருக்கிறது.

அதன்படி எடப்பாடி பழனிச்சாமி மலையாகவும், தன்னுடைய பலமாகவும் கருதும் கொங்கு மண்டல எம்எல்ஏக்களை திமுகவில் இழுத்து போட்டு அதிர்ச்சி தருவதே முதற்கட்ட ப்ளான்.

சமீபகாலமாக முதல்வர் ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் வலம் வருவதையும், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி திமுகவில் இணைந்ததையும் வைத்து நெட்டிசன்கள் இப்படிதான் முடிச்சு போடுகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்களாக உள்ள 30க்கு மேற்பட்ட எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு இணைவது உறுதி செய்யப்படும் பட்சத்தில் கொங்கு மண்டலத்தில் மிகப் பெரிய விழா நடத்தி பிரமாண்டம் காட்டவும், திமுக தலைமையை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்யவும் ‘ஷாக்’ தரும் அமைச்சர் மும்முரம் காட்டி வருவதாக உடன் பிறப்புகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.