குஜராத் கலவரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்த உச்சநீதிமன்றம்..! – நிலுவையில் இருக்கும் ஒரே ஒரு வழக்கு..!

குஜராத்தில் 2002 கோத்ரா கலவரத்தைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் இன்று முடித்து வைத்தது. 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பாபர் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிக்கப்பட்டது தொடர்பாக உத்தரப்பிரதேச அரசு மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு மனுக்களுக்கு உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு குஜராத்தில் 2002ஆம்ஆண்டு நடந்த கோத்ரா கலவர வழக்குகள் தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் விசாரணைக்குவந்தன. அப்போது வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, “கோத்ரா கலவரத்தில் ஒரு வழக்கு தவிர, அனைத்து வழக்குகளிலும், விசாரணைகள் முடிவடைந்து, மேல்முறையீடுகள் மட்டுமேஉயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் நிலுவையில் உள்ளன” என்றுதெரிவித்தார்.

தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு கூறுகையில், நரோடா காம் வழக்கில் ஒரே ஒரு வழக்குவிசாரணை மட்டும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைஎடுக்குமாறு சிறப்பு புலனாய்வு குழுவை கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும், இந்த வழக்குகள் “காலப்போக்கில்பயனற்றதாக” மாறிவிட்டன என்று கூறிய நீதிபதிகள் அமர்வு, தற்போது வரை நிலுவையில் உள்ள கோத்ராகலவரம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் இன்று முடித்து வைத்தது.

இந்நிலையில், கோத்ரா கலவரம் தொடர்பாக பிரதமர்மோடிக்கு எதிராக பொய் வழக்கு புனைந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளடீஸ்டா செடல்வாட்டின் ஜாமீன் மனுவை, உரியவகையில் நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.