ஜகார்த்தா : இந்தோனேஷியாவில், நேற்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், மக்கள் பீதியடைந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால், அடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகிறது.இந்நிலையில், இந்நாட்டின் சைபரட் நகரில், நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. பீதியடைந்த மக்கள், பாதுகாப்புக்காக உயரமான நிலப்பரப்பிற்கு சென்றனர்.’ரிக்டர் அளவுகோலில், 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், சுனாமி அபாயம் இல்லை’ என, இந்தோனேஷிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த தகவல் இல்லை.
ஜகார்த்தா : இந்தோனேஷியாவில், நேற்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், மக்கள் பீதியடைந்தனர்.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்