சிறுத்தை பீதியால் அஞ்சனாத்திரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு

கொப்பல்:

கொப்பல் மாவட்டம் கங்காவதி டவுன் அருகே அஞ்சனாத்திரி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அஞ்சனாத்திரி மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுத்தை அந்த மலைப்பகுதியில் சுற்றித்திரிவதாக வந்த தகவலை அடுத்து கோவில் நிர்வாகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைப்பகுதிக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. மலைப்பகுதியில் உள்ள நடைபாதையில் சிறுத்தைகள் நடமாட்டத்தால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.