சீனாவில் நிலவி வரும் மந்த நிலையால் இந்தியா பலன் பெற வாய்ப்புண்டு என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
சீனாவின் மந்த நிலைக்கு மத்தியில், அதனால் இந்தியா பலனடைய கூடும் என்று ஏற்கனவே பல நிபுணர்களும் கூறி வரும் நிலையில், தற்போது எஸ்பிஐ ஆய்வறிக்கையும் அதனையே சுட்டிக் காட்டுகின்றது.
எஸ்பிஐ ஈகோரேப் Frontloading Fed rate hikes and China’s worsening construction bubble என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
5G முதல் அரிசு மாவு வரை.. 3 புதிய வர்த்தகம்.. ரிலையன்ஸ் மாஸ்டர் பிளான்..!
சீனாவுக்கு பிரச்சனை
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. ஆனால் இந்தியா அப்படி அல்ல, மற்ற நாடுகளை காட்டிலும் வளர்ச்சி பாதையிலேயே சென்று கொண்டுள்ளது.
சீனாவோ கொரோனா ஜீரோ கோவிட் பாலிசிக்கு இடையில் பின் தங்கிய பொருளாதாரம், ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வரும் தாக்கம் என பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் தேவையானது சரிவினைக் கண்டுள்ளது.
இந்தியாவுக்கு நல்ல விஷயம்
ஏற்கனவே சீனாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், ஐபோன் 14 உற்பத்தியினை இந்தியாவில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், உற்பத்தியினை இந்தியாவிலும் செய்ய திட்டமிட்டுள்ளது. இது சீனாவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்தியாவின் மாபெரும் சந்தையினை இழக்க நிறுவனம் தயாராக இல்லை என்பதையே உணர்த்துகிறது.
சாதகமான விஷயம்
இது அதன் விற்பனை அதிகரிப்பதற்காக என்றாலும், உற்பத்தியினை இந்தியாவில் செய்யும் போது அது இந்தியாவின் வளர்ச்சிக்கும் சாதகமாக அமையும். இங்கு வேலை வாய்ப்பினையும் அதிகரிக்கும். மொத்தத்தில் சீனாவின் மந்த நிலை, இந்தியாவுக்கு சாதகமான விஷயம் என எஸ்பிஐ நம்புகிறது.
வீடு விற்பனை சரிவு
இந்தியாவின் வீடு விற்பனை கடந்த ஆண்டினை காட்டிலும் 60% அதிகரித்து, 1,58,708 யூனிட்களாக இருந்தது. கடந்த 2021ம் ஆண்டின் இரண்டாம் பாதியை விட 19% அதிகரிப்பினை கண்டுள்ளது.
ஆனால் இந்த காலகட்டத்தில் சீனாவின் முக்கிய வணிகமாக இருந்து வந்த ரியல் எஸ்டேட் துறையானது, பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இதற்கு சிறந்த உதாரணமே சீனாவின் எவர்கிராண்டே நிறுவனம் தான்.
சீனாவின் பிரச்சனை இந்தியாவுக்கு சாதகம்
சில தினங்களுக்கு முன்பு சுனில் பார்தி மிட்டல், சர்வதேச நாடுகளில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், நம்பகமான, பாதுகாப்பான உற்பத்தி இடங்களை நிறுவனங்கள் தேட தொடங்கியுள்ளது. குறிப்பாக சீனாவில் நிலவி வரும் பிரச்சனை இந்தியாவுக்கு சாதகமாக மாறத் தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், இங்கு சப்ளை சங்கிலியில் தாக்கம் நிலவி வருகின்றது. இது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது என கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.
China’s decline will benefit India: SBI research report
China’s decline will benefit India: SBI research report/சீனாவின் சரிவு இந்தியாவுக்கு பலன் தரும்.. எப்படி தெரியுமா.. எஸ்பிஐ என்ன சொல்லியிருக்கு பாருங்க!