சென்செக்ஸ் 1564 புள்ளிகள் உயர்வு.. தடாலடி உயர்வுக்கு என்ன காரணம்..?

மும்பை பங்குச்சந்தையின் இன்று அனைத்துத் துறைகளிலும் அதிகளவிலான முதலீடுகள் குவிந்த காரணத்தால் செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபங்களை அடைந்தது வங்கி மற்றும் நிதி பங்குகள் தான்.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1,564.45 புள்ளிகள் உயர்ந்து, பிஎஸ்இ குறியீட்டில் இருக்கும் அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் 5.65 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் மொத்த சந்தை மூலதனம் திங்கட்கிழமை வர்த்தக முடிவில் ரூ 274.56 லட்சம் கோடியிலிருந்து ரூ 280.21 லட்சம் கோடியாக உயர்ந்தது. இந்தத் தடாலடி உயர்வுக்கு என்ன காரணம்..?

சென்செக்ஸ்: 2 மாதத்தில் மோசமான சரிவு.. முதலீட்டாளர்களே உஷார்..!

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

சென்செக்ஸ் 2022 ஆம் ஆண்டில் ஓரே நாளில் அதிகப்படியான வளர்ச்சியை எட்டிய இரண்டாவது பெரிய வளர்ச்சி அளவாக இன்றைய வர்த்தகம் விளங்குகிறது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1,564.45 புள்ளிகள் உயர்ந்து 59,537.09 இல் முடிவடைகிறது. இதேபோல் நிஃப்டி குறியீடு 446.40 புள்ளிகள் உயர்ந்து 17,750 புள்ளிகளை எட்டியுள்ளது.

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தை

சென்செக்ஸ் இன்று 2.70 சதவீதம் உயர்ந்துள்ளது, நிஃப்டி குறியீடு 2.58 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் ஆசிய சந்தையில் இன்று கலவையான வர்த்தகத்தையே பதிவு செய்துள்ளது, தென் கொரியா 0.99 சதவீதம், ஜப்பான் நிக்கி 1.14 சதவீதம் உயர்த்த நிலையில் சீனா 0.42 சதவீதம் சரிந்துள்ளது. இந்நிலையில் இந்திய சந்தையின் வளர்ச்சிக்கு என்ன காரணம் என்பதை இப்போது பார்ப்போம்.

வங்கி பங்குகள்
 

வங்கி பங்குகள்

செவ்வாய்க்கிழமை சென்செக்ஸ் குறியீடுகளின் உயர்வு பல காரணங்கள் அடிப்படையிலானது என்றாலும், இந்த வர்த்தகச் சந்தையில் வளர்ச்சிக்கான பாதை சிறப்பாக இருக்கும் காரணத்தாலும் பண்டிகை காலம் வரும் நிலையிலும் வங்கி பங்குகள் முக்கிய முதலீடாக முதலீட்டாளர்கள் பார்த்துள்ளனர்.

BFSI பங்குகளான HDFC வங்கி, ICICI வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், HDFC மற்றும் SBI ஆகியவை வங்கி பங்குகள் மீது அதிகப்படியான முதலீடுகள் குவிந்தது.

 

S&P500 எதிர்காலங்கள்

S&P500 எதிர்காலங்கள்

கடந்த இரண்டு வர்த்தகங்களில் அமெரிக்கப் பங்குகள் கடுமையான வீழ்ச்சிக்குப் பிறகு, S&P500 எதிர்காலங்கள் ஓரளவு உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டது. இது இன்றைய வர்த்தகத்தின் பிற்பகுதியில் அமெரிக்கப் பங்குகளுக்குச் சாதகமான தொடக்கத்தை அளித்த நிலையில் பிளாட் ஆக முடியும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

கச்சா எண்ணெய் விலையில் சரிவு

கச்சா எண்ணெய் விலையில் சரிவு

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டியை உயர்த்திய நிலையில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் மந்தமான வர்த்தகச் சூழ்நிலைக்குள் செல்லும் அபாயம் உருவாகும் சூழ்நிலை காரணமாகக் கச்சா எண்ணெய் விலை சரியத் துவங்கியது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் உயர்ந்த கச்சா எண்ணெய் செவ்வாய்க்கிழமை சரிந்தது.

டாலர் ஆதிக்கம்

டாலர் ஆதிக்கம்

அமெரிக்க டாலர் தொடர்ந்து 20 வருட உயர்வில் இருந்தாலும் ரூபாய் மதிப்பு 80.10 ரூபாயில் இருந்து 79.81 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளையில் டாலர் ஆதிக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது.

இதனால் முதலீட்டுச் சந்தையில் உள்நாட்டு முதலீடுகள் உடன் அன்னிய முதலீட்டின் அளவும் அதிகரித்துள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sensex gained 1564 pts 2nd biggest gain in 2022: what are the Key factors for sensex rally

Sensex gained 1564 pts 2nd biggest gain in 2022: what are the Key factors for sensex rally சென்செக்ஸ் 1564 புள்ளிகள் உயர்வு.. தடாலடி உயர்வுக்கு என்ன காரணம்..?

Story first published: Tuesday, August 30, 2022, 17:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.