ஆகஸ்ட் மாதம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், செப்டம்பர் 1 முதல் பல மாற்றங்கள் வரவுள்ளன.
அது என்னென்ன மாற்றங்கள்? அதனால் சாமானியர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் உண்டு? இதனால் என்னென்ன சவால்கள் வரப்போகின்றன? இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
உலக பணக்காரர் பட்டியல்.. 3வது இடத்தில் அதானி.. முதல் 10 இடங்களில் யார் யார்?
சமையல் சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையின் விலையை பொறுத்து, கேஸ் விலையினை மாற்றம் செய்து வருகின்றன. ஆக செப்டம்பர் 1 முதல் சமையல் கேஸ் விலையில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டோல் கட்டணம் உயர்வு
யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் டோல் கட்டணத்தை, யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் உயர்த்தியுள்ளது . இது ஆக்ராவையும் நொய்டாவையும் இணைக்கும் ஒரு விரைவு சாலையாக உள்ளது. இது தொடங்கும் இடமான கிரேட்டர் நொய்டா முதல் டோல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு 3.25 கிலோ மீட்டருக்கும் 15 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனினும் வாகனத்திற்கு ஏற்ப இந்த கட்டணம் மாறுபடும். இதன் படி ஒரு கிலோ மீட்டருக்கு 2.50 பைசாவாக இருந்த கட்டணம் 15 பைசா அதிகரித்து, 2.65 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கார், ஜீப், வேன் மற்றும் இலகுரக வாகங்களுக்கு பொருந்தும்.
மற்ற வாகனங்களுக்கு எப்படி?
இலகுரக வாகனங்களில் மினி பஸ் மற்றும் சிறிய சரக்கு வாகனங்களுக்கு, டோல் கட்டணம் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 4.15 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. இதே பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கான டோல் கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு 8.45 ரூபாய் எனவும், நீளமான வாகனங்களுக்கான டோல் கட்டணம் கிலோமீட்டருக்கு 12.90 ரூபாயாகவும், பெரிய வாகனங்களுக்கான டோல் கட்டணம் கிலோமீட்டருக்கு 18.80 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சொத்துகள் விலை அதிகரிக்கலாம்
வட்ட விகிதங்கள் என்று கூறப்படும் சர்க்கிள் ரேட் காஸியாபாத்தில் செப்டம்பர் 1 முதல் அதிகரிக்க உள்ளது. இதன் மூலம் சொத்துகளின் விலை அதிகரிக்கலாம். இது புதியதாக காஸியாத் பகுதியில் சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தலாம். கூடுதலாக செலவிடும் நிலைக்கு தள்ளப்படலாம்.
நேஷனல் பென்சன் திட்டம்
நேஷனல் பென்சன் திட்டத்தில் சில விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. POPsகளில் இந்த கணக்கு தொடங்கப்படுவதற்கு கமிஷன் செலுத்தப்படவேண்டும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் POPsகளில் ஈடுபட வேண்டும். மேலும் நேஷனல் பென்சன் திட்டத்தில் ஈடுபடுள்ள நபர்களுக்கு பதிவு மற்றும் பிற சலுகைகளையும் வழங்குகிறது. இந்த புதிய விதிமுறைகள் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. இதற்காக கமிஷனால 10 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரையில் கிடைக்கும்.
குறைந்த பிரீமியம் செலுத்துங்கள்
இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.ஐ), பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் முகவர்களுக்கு கொடுக்கும் கமிஷனை கட்டுப்படுத்துமாறு தெரிவித்துள்ளது. இது 20%-க்குள் இருக்குமாறு பரிந்துரை செய்துள்ளது. இது முன்னதாக 30 – 35% ஆக இருந்தது. இது குறித்தான செப்டம்பர் நடுத்தர காலத்தில் இது குறித்து டிராப்ட் சப்மிட் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரீமியம் குறையலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆடி கார் விலை அதிகரிப்பு
ஜெர்மன் ஆட்டோமொபைல் நிறுவனமான ஆடி செப்டம்பர் 2020 முதல் தனது கார் மாடல்களின் விலை உயர்த்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்திலும் 2.4% வரையில் விலையினை உயர்த்தியது. சப்ளை சங்கிலி செலவுகள் மற்றும் மூலதன செலவு அதிகரிப்பு காரணமாக இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.
From cooking gas to car prices, major changes coming from September 1
From cooking gas to car prices, major changes coming from September 1/செம்டம்பர் 1 முதல் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள்.. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன?