பனிப்போரை மிக சாமர்த்தியமாக முடிவுக்கு கொண்டுவந்து சாதித்த மிகைல் கோர்பச்சேவ்
கம்யூனிச கிழக்கு ஐரோப்பாவில் ஜனநாயக சார்பு போராட்டங்கள் வெடித்தபோது ஜனநாயகவாதியாக செயல்பட்டார்
சோவியத் ரஷ்யாவின் முன்னாள் தலைவரான மிகைல் கோர்பச்சேவ் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையேயான பனிப்போரை மிக சாமர்த்தியமாக முடிவுக்கு கொண்டுவந்து சாதித்த மிகைல் கோர்பச்சேவ் தமது 91ம் வயதில் மரணமடைந்துள்ளார்.
@getty
பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்து சாதித்தாலும், மிகைல் கோர்பச்சேவ்வால் சோவியத் ஒன்றியம் சின்னாபின்னமாவதை தடுக்க முடியாமல் போனது.
மிகைல் கோர்பச்சேவ் மரண காரணம் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவர் கடந்த ஜூன் மாதம் தொட்டே சிறுநீரக கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்றே கூறப்படுகிறது.
சோவியத் ஒன்றியத்தின் கடைசி ஜனாதிபதியான கோர்பச்சேவ் அமெரிக்காவுடன் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தங்களை முன்னெடுத்திருந்தார்.
பலம்பொருந்திய மேற்கத்திய நாடுகளுடன் நட்பு பாராட்டிய கோர்பச்சேவ் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஐரோப்பாவில் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டார்.
@pa
இதனாலையே, பிரித்தானிய பிரதமர் மார்கரெட் தாட்சர் பாராட்டியதுடன், இணைந்து செயல்பட ஆர்வமாக இருப்பதாகவும் அறிவித்தார்.
மேலும், 1989ல் கம்யூனிச கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் முகாமில் ஜனநாயக சார்பு போராட்டங்கள் வெடித்தபோது அவர் ஜனநாயகவாதியாக செயல்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நடந்தேறிய அரசியல் மாறுதல்களால் சோவியத் ஒன்றியம் 15 ஆக சிதறியது.
கோர்பச்சேவ் 1985 ல் தமது 54வது வயதில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக உயர்ந்தார்.
@ap
வரையறுக்கப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற லட்சியங்களைக் கொண்டிருந்தார் கோர்பச்சேவ். சிறுநீரக கோளாறுகள் காரணமாக கோர்பச்சேவ் பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கோர்பச்சேவின் மனைவி ரைசா கடந்த 1999ல் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.