புதுடெல்லி: தன் மீது அரசியல் தாக்குதல் நடத்துவதற்காக காந்தியவாதியான அன்னா ஹசாரேவை பாஜக பயன்படுத்துகிறது என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் பதிலடி தந்துள்ளார்.
தலைநகர் டெல்லியின் புதிய மதுக்கொள்ளையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து டெல்லி அரசியலில் சிபிஐ சோதனை, விசாரணை, சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் என்ற பரபரப்புக்கு இடையில், மூத்த சமூக ஆர்லவலரும் காந்தியாவதியுமான அன்னா ஹசாரே, ஆரம்பகாலத்தில் தன்னைப் பின்பற்றிவந்த அரவிந்த் கேஜ்ரிவாலை “அதிகாரபோதை”யில் இருப்பாதாக கடுமையாக விமர்சித்து இரண்டு பக்கங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், “புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக பாஜகவினர் தொடந்து குற்றம் சாட்டிவருகின்றனர். ஆனால் சிபிஐ விசாரணையில் ஊழல் நடைபெறவில்லை என்று தெரியவந்துள்ளது. ஆனாலும், மக்கள் பாஜகவை நம்பவில்லை. பிரபலமான ஒருவரை வைத்து தனிநபர் தாக்குதல் நடத்துவது அரசியலில் பொதுவானதுதான். பாஜகவும் தற்போது அன்னா ஹசாரேவை வைத்து அதைத்தான் செய்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
முன்னதாக, ‘உங்கள் வார்த்தைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லையே…’ – இப்படித்தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விமர்சித்துள்ளார். வாசிக்க > ‘ஒரு பேரியக்கத்தில் விளைந்த கட்சிக்கு இது அழகா?’ – கேஜ்ரிவாலுக்கு ஹசாரே எழுதிய கடிதமும் பின்புலமும்