மும்பை : மஹாராஷ்டிராவில், ‘ஆன்லைன்’ வாயிலாக பணம் அனுப்பி வைத்தால் திருடிய ‘மொபைல் போனை’ திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறிய திருடன் கைது செய்யப்பட்டான். மும்பை குர்லா பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வாசிம் குரேஷி என்பவர் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தார். அன்று இரவே, தன்னுடன் பணிபுரியும் நான்கு பேருடைய மொபைல் போனை திருடிக் தலைமறைவானார். போனை இழந்த ஒருவர் குரேஷியின் எண்ணுக்கு அழைத்தார். அதில் பேசிய குரேஷி, ‘என் வங்கிக் கணக்குக்கு ஆன் லைன் வாயிலாக பணம் அனுப்பினால் போனை திருப்பித் தருகிறேன்’ என்றார். இதையடுத்து, போனை இழந்த நால்வரும் போலீசில் புகார் செய்தனர். குரேஷியிடம் இருந்த மொபைல் போன் எண்களை கண்காணித்த போலீசார் தானே பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த குரேஷியை நேற்று கைது செய்து, அவரிடம் இருந்து 10 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
மும்பை : மஹாராஷ்டிராவில், ‘ஆன்லைன்’ வாயிலாக பணம் அனுப்பி வைத்தால் திருடிய ‘மொபைல் போனை’ திருப்பிக் கொடுத்து விடுவதாக கூறிய திருடன் கைது செய்யப்பட்டான்.மும்பை குர்லா பகுதியில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்