தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்யராஜ், போட்டி!

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனையொட்டி தேர்தல் நடக்கவிருக்கிறது. தலைவர் பதவிக்கு பாக்யராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் போட்டியிடுகிறார் எனத் தகவல். இது குறித்து விசாரித்தோம்.

எஸ்.ஏ.சி

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநர்களின் கதை திருட்டு பிரச்னை எழும் போதெல்லாம் அந்த இயக்குநர்கள் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தைத்தான் நாடுவார்கள். தமிழ்த் திரையுலகில் எழுத்தாளர்களுக்கென இருக்கும் தனித்துவமான சங்கம் என இதைச் சொல்வார்கள். 2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடப்பது வழக்கம்.

இப்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் தற்போது முடிவடைய இருப்பதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி வரும் செப்டம்பர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சங்கத்திற்குத் தேர்தல் நடத்துவதாக அறிவித்துள்ளனர். தேர்தலை நடத்தித் தருவதற்காக ச.செந்தில்நாதன் என்னும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் இறுதிப்பட்டியல்
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் இறுதிப்பட்டியல்
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் இறுதிப்பட்டியல்

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் கே.பாக்யராஜூம், எஸ்.ஏ.சந்திரசேகரும், செயலாளர் பதவிக்கு இயக்குநர்கள் லியாகத் அலிகானும், மனோஜ் குமாரும், பொருளாளர் பதவிக்கு பால சேகரனும், ரமேஷ் கண்ணாவும் போட்டியிடுகின்றனர்.

துணைத் தலைவர்கள் பதவிக்கு ‘யார்’ கண்ணன், காரைக்குடி நாராயணன், ரவி மரியா, மனோபாலா ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு மங்கை அரிராஜன், சின்னி ஜெயந்த், கவிஞர் முத்துலிங்கம், மதுரை தங்கம், வி.பிரபாகர், சி.ரங்கநாதன், எம்.ரத்னகுமார், பி.சாந்தகுமார், டி.கே.சண்முகசுந்தரம், என்.வேல்முருகன் ஆகிய 10 பேர் போட்டியிடுகின்றனர். இது தவிரச் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு அஜயன் பாலா, பாலாஜி சக்திவேல், சிங்கம்புலி உட்படப் பலர் போட்டியிடுகின்றனர்.

சங்கத் தேர்தல் செப்டம்பர் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று திரையிசை கலைஞர்கள் சங்கத்தில் நடைபெறுகிறது. வாக்குப் பதிவுகள் முடிந்ததும் அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.