தொடர்ந்து படங்கள் பிளாப்..வேறு வழியில்லாமல் இப்படி ஒரு முடிவை எடுத்த நடிகர் ஜீவா!

சென்னை : தொடர்ந்து படங்கள் படங்கள் தோல்வியடைந்து வருவதால்,நடிகர் ஜீவா வேறு வழியில்லாமல் அதிரடியாக ஒரு முடிவை எடுத்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் ஆர். பி சௌத்ரியின் மகன் தான் ஜீவா. இவர் தமிழில் 2003 ஆம் ஆண்டு இயக்குநர் ரவி மரியா இயக்கத்தில் வெளியான ஆசை ஆசையாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அந்த படம் ஜீவாவுக்கு நல்லத்தொடக்கமாக அமைந்து அவருக்கு பெயரைப் பெற்றுத்தந்தது.

நடிகர் ஜீவா

நடிகர் ஜீவா அமீர் இயக்கத்தில் நடித்த ராம் திரைப்டம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம். அதற்கு பின்னர் டிஷ்ஷும், ஈ, கற்றது தமிழ், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம்,சிவா மனசுல சக்தி, கோ, நண்பன், என்றென்றும் புன்னகை போன்ற வெற்றிப்படங்களில் நடித்து சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

தொடர்ந்து படங்கள் தோல்வி

தொடர்ந்து படங்கள் தோல்வி

வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதை கைவிடுத்து வழக்கமான கமர்சியல் படங்களில் இறங்கியதால், இவரது மவுசு கொஞ்சம் இறங்கிவிட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 83 என்னும் ஹிந்தி திரைப்படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும், கோலிவுட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, கடந்த பத்து வருடங்களுக்கு மேல் ஜீவாவுக்கு வெற்றி படம் ஏதுமில்லை.

'சர்க்கார் வித் ஜீவா'

‘சர்க்கார் வித் ஜீவா’

இந்நிலையில், நடிகர் ஜீவா, ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘சர்க்கார் வித் ஜீவா’ எனும் விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்த விளையாட்டில் நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் நடிகர் ஜீவாவை சுற்றி விளையாடுவார்கள். அவர்கள் ஜீவாவை வெல்கிறார்களா? அல்லது ஜீவா அவர்களை வெல்கிறாரா? என்பதுதான் விஷயம்.

ஆஹா டிஜிட்டல் தளம்

ஆஹா டிஜிட்டல் தளம்

உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்யேக பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கிவரும் ஆஹா டிஜிட்டல் தளம், இளம் தலைமுறை ரசிகர்களுக்காக ‘சர்க்கார் வித் ஜீவா’எனும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துகிறது. ரசிகர்களும், சந்தாதாரர்களும், புதிய வாடிக்கையாளர்களும் ‘சர்க்கார் வித் ஜீவா’வைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.