தனக்குக் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை அமலாபால் கொடுத்த புகாரின் பேரில், திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபால், கடந்த 2010 ஆம் ஆண்டு மைனா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு திரைப்பட தொழிலில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர் சிங் தத் என்கின்ற பூவி என்பவருடன் நடிகை அமலாபாலுக்கு நட்பு ஏற்பட்டது. இதையடுத்து, அமலாபால் மற்றும் பவ்நிந்தர் சிங் தத் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து அவர் திரைப்படம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, அமலாபாலுடன் சேர்ந்து பவ்நிந்தர் சிங் தத்துடன் இணைந்து வீடு வாடகைக்கு எடுத்து அதில் அலுவலகத்தை நடத்தி வந்துள்ளனர். பூவி என்று பெயரிடப்பட்ட திரைப்பட நிறுவனத்தின் அலுவலகம் கோட்டக்குப்பம் அருகே ஆரோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள பெரிய முதலியார் சாவடியில் திறக்கப்பட்டது.
இப்புகாரின் பேரில், விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார், பவ்நிந்தர் சிங் தத் உள்பட 12 பேர் மீது, 16 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து முதலியார் சாவடியில் இருந்த பவ்நிந்தர் சிங் தத்தை போலீசார் இன்று கைது செய்தனர்.
தலைமறைவான மற்ற 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட பவ்நிந்தர் சிங் தத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், அவரை வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அழைத்துச் சென்றுள்ளனர்.