நீண்டகால விசா வழங்க சிங்கப்பூர் முடிவு… இந்த ஒரே ஒரு காரணம் தான்!

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் சிங்கப்பூர் திறமையான ஊழியர்களுக்கு நீண்ட கால விசா வழங்க விசா விதிமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் அரசின் இந்த நடவடிக்கை ஊழியர்களின் மன அழுத்தங்களை குறைக்கும் என்றும் சிங்கப்பூரில் தாராளமாக ஊழியர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

ரூ.4 கோடி மோசடி.. கிரெடிட் கார்டில் இப்படி கூட மோசடி நடக்கலாம்.. எச்சரிக்கையா இருங்க!

5 ஆண்டு விசா

5 ஆண்டு விசா

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி புதிய விசா விதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாதம் குறைந்தபட்சம் $30,000 சம்பாதிக்கும் வெளிநாட்டினர் ஐந்தாண்டு பணிக்கான விசா அனுமதியை பெறலாம் என்று தெரிவித்துள்ளது.

புதிய விசா விதிகள்

புதிய விசா விதிகள்

சிங்கப்பூரில் பணிபுரிய வரும் ஊழியர்கள் மட்டுமின்றி விளையாட்டு, கலை, அறிவியல் மற்றும் கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு வரும் ஜனவரி 1 முதல் புதிய விசா விதிகள் நடைமுறைக்கு வரும் என்றும், அவர்களுக்கும் நீண்ட கால விசா வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் மனிதவள அமைச்சர்
 

சிங்கப்பூர் மனிதவள அமைச்சர்

இந்த புதிய விசா விதிமுறை நடவடிக்கையால் சிங்கப்பூரில் வணிகம் பெருகும் என்றும் திறமையானவர்கள் சிங்கப்பூரில் முதலீடு செய்வதற்கும், வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் பாதுகாப்பான அம்சங்களை பெறுவார்கள் என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘எனவே திறமைகளுக்கான உலகளாவிய மையமான சிங்கப்பூரின் நிலையை உறுதிப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது சரியானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

சிறப்பு பாஸ்

சிறப்பு பாஸ்

அடுத்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் வெளிநாட்டினரை பணியமர்த்துவதற்கு முன், Fair Consideration Framework என்ற அமைப்பின் கீழ், உள்நாட்டில் வேலை செய்பவர்களுடன் ஒப்பிடும் அளவில் சிறப்பு பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி வணிக நாடுகள்

போட்டி வணிக நாடுகள்

இந்த விசா விதிகள் மாற்றம் காரணமாக ஹாங்காங் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற போட்டி வணிக நாடுகளுடன் சிறப்பாக போட்டியிட சிங்கப்பூருக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் உலகளாவிய திறமையான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

சிங்கப்பூர் சிறந்த உலகளாவிய திறமைகளை ஈர்க்க விரும்புகிறது. குறிப்பாக தொழில்நுட்பம், கனரக தொழில்கள், கட்டுமானத் துறையில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிகிச்சை மற்றும் பல்வேறு வசதிகளை செய்து தரவும் சிங்கப்பூர் அரசு முன்வந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Singapore Unveils Long-Term Work Visas To End Talent Crunch

Singapore Unveils Long-Term Work Visas To End Talent Crunch | நீண்டகால விசா வழங்க சிங்கப்பூர் முடிவு… இந்த ஒரே ஒரு காரணம் தான்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.