Annamalai condemns Minister EV Velu speech about farmers: பச்சைத்துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயியா? என அமைச்சர் எ.வ.வேலு கேட்டுள்ளது, ஒட்டுமொத்த விவசாயிகளையும் அவமானப்படுத்துவது போன்றது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சாலைப்போக்குவரத்து அதிகரித்து இருக்கிறது. எனவே சாலையை விரிவாக்கம் செய்யலாம் என்றால், நிலம் இல்லாதவர்கள் கூட பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகள் என்று கூறிவருகின்றனர், என் நிலத்தை எடுக்காதீர் என்றும் சொல்கின்றனர் என்று பேசினார்.
இதையும் படியுங்கள்: 3 கல்வி திட்டங்கள் தொடக்க விழாவுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்; நன்றி தெரிவித்து அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட்
இந்தநிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பச்சைத்துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயி என்று வந்துவிட்டார்கள் என அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார். தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளையும் கொச்சைப்படுத்துகின்ற சொல் இது. விவசாயத் தொழிலை அவமானம் செய்திருக்க கூடிய அமைச்சர் எ.வ.வேலு, அவர் தெரிந்து பேசியிருந்தாலும், தெரியாமல் பேசியிருந்தாலும் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், அமைச்சர் பச்சைத்துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகளா என்று கேட்டு இருக்கிறாரே, முதலமைச்சரையும் சேர்த்துதான் கேட்டாரா?, ஏனென்றால் நமக்கு எல்லாருக்கும் தெரியும், முதலமைச்சர் வயலில் இறங்கி வேலை செய்யும் விவசாயி கிடையாது என்று. ஆனால் பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு மேடையில் பேசுகிறார். எனவே திமுகவே இப்படிதான் விவசாயிகளை பார்க்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது, என்றும் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil