சென்னை : நடிகர் சிவாஜி கணேசன் -பண்டரிபாய் நடிப்பில் கடந்த 1952ல் வெளியான படம் பராசக்தி. சிவாஜியின் முதல் படம் இது.
கிருஷ்ணன் -பஞ்சு இயக்கத்தில் மு கருணாநிதி வசனத்தில் வெளியானது இந்தப் படம்.
தன்னுடைய முதல் படம் என்பது தெரியாத வகையில் சிவாஜி கணேசனின் சிறப்பான நடிப்பு இந்தப் படத்தில் வெளிப்பட்டிருக்கும்.
நடிகர் சிவாஜிகணேசன்
நடிகர் சிவாஜிகணேசனின் ஆரம்பக்கால படங்கள் மிகவும் சிறப்பானவை. பராசக்தி படத்தில்தான் இவரது திரைப்பயணம் ஆரம்பித்தது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தல் சிவாஜி கணேசனுடன் பண்டரிபாய், எஸ்எஸ் ராஜேந்திரன், எஸ்வி சகஸ்ரநாமம், சிவரஞ்சனி உள்ளிட்டடோர் நடித்திருந்தனர்.
நீதிமன்ற காட்சிகள்
சக்சஸ் என்ற டயலாக்குடன்தான் இந்தப் படத்தில் சிவாஜி தோன்றுவார். இந்தப் படத்தை தொடர்ந்து அவரது சக்சஸ் தொடர்ந்தது. இந்தப் படத்தில் நீதிமன்றத்தில அவர் பேசிய மு கருணாநிதியின் வசனங்கள் எவர்கிரீன் ரகம். ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்று சிவாஜி பேசியதெல்லாம் காலத்தால் அழிக்க முடியாத டயலாக்குகள்.
பணத்தை பறிக்கொடுக்கும் சிவாஜி
பர்மாவிலிருந்து தன்னுடைய தங்கை கல்யாணியை பார்ப்பதற்காக சொந்த ஊரான மதுரைக்கு வரும் சிவாஜி, மோசடிப் பெண்ணிடம் தன்னுடைய பணத்தை பறிகொடுக்கிறார். தொடர்ந்து தன்னுடைய கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் தங்கையையும் காண்கிறார்.
கல்யாணியின் சுகவாழ்வு
கையில் சல்லிக் காசு கூட இல்லாமல், தங்கையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல், ஆனால் அவரையே சுற்றி வருகிறார். வாழ்க்கை அவரை எப்படி புரட்டிப் போடுகிறது. கல்யாணியின் சுக வாழ்க்கைக்கு அவர் என்ன செய்தார் என்பதாக இந்தக் படத்தில் கதைக்களம் செல்லும்.
சிவாஜி -பண்டரிபாய் காதல்
இந்தப் படத்தில் சுகமான ஒரு பார்ட் என்றால் அது சிவாஜி மீது பண்டரிபாய் வைக்கும் காதல்தான். படத்தில் புதுப் பெண்ணின் மனதை தொட்டு என்ற பாடல் மனதிற்கு இதம். கருப்பு வெள்ளையிலும் நம்முடைய மனதை வண்ணங்களால் இந்தப் பாடல் நிறைக்கும். அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த இந்தப் பாடலை தற்காலத்திய ரசிகர்கள் எப்படி பார்த்திருக்கிறார்கள் பாருங்கள்.
வசீகராவுடன் இணைத்த ரசிகர்கள்
இந்தப் படத்தின் சீனில் பண்டரிபாய் வசீகரா பாடலை பாடுகிறார். அடை மழை வரும் அதில் நனைவோமே என்று அவர் ஜில்லிட்டு பாடுவதாக இந்த வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன. ஆனாலும் பழைய காலத்து தொனியிலேயே இந்தப் பாடல் பாடப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு குரூப்பாகத்தான் திரிகிறார்கள் என்றே இந்தப் பாடலை பார்த்தவுடன் எண்ணத் தோன்றுகிறது.