பாகிஸ்தானில் அத்தியவாசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு: பாதிப்புகளை சீர்படுத்த 10 பில்லியன் டாலர் தேவை

இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர்மழையால் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு காய்கறிகளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு ஏறியுள்ளது என்றும், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்படுத்த 10 பில்லியன் டாலர் தேவைப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை பெய்யத் தொடங்கியது. எப்போதும் அந்த குறிப்பிட்ட நாட்களே மழை பெய்யும்.

இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவும். ஆனால் இந்த முறை பெய்த பருவமழை இன்னும் முடியாமல் தொடர்ந்து கனமழையாக கொட்டித்தீர்த்து வருகிறது.

அப்பாவி மக்கள் உயிரிழப்பு

மழை வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு வந்த பின்னரும் தொடர்ந்து மழை கொட்டி வருவதால் பாகிஸ்தான் நாட்டின் 3-ல் ஒருபகுதி நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. ஏராளமான அப்பாவி மக்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டும், மண்சரிவில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர். இது வரை பாகிஸ்தானில் மழைக்கு 1100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் 3 அரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

80 சதவீத தக்காளி தண்ணீரில் மூழ்கி நாசம்

80 சதவீத தக்காளி தண்ணீரில் மூழ்கி நாசம்

இதேபோல் ஏராளமான குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. 80-க்கும் மேற்பட்ட பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தானில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. இதேபோல் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் தற்போது உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பயிரிடப்பட்டிருந்த 80 சதவீத தக்காளி தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளதால், இதன் தேவை அதிகரித்து விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

திணறும் பாகிஸ்தான் அரசு

திணறும் பாகிஸ்தான் அரசு

ஒருபுறம் கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வரும் நிலையில், தற்போது மழையினால் அந்நாட்டு மக்கள் பரிதவித்து வருகின்றனர். நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. எனினும் ஒருசில இடங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கூட ஆய்வு செய்ய முடியாத நிலை உள்ளது. இதேபோல் காய்ந்த நிலப்பரப்புகள் கூட இல்லாததால் வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது. மீட்பு பணிகளிலும் ஒருசில இடங்களில் ஈடுபட முடியாத சூழல் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவிடம் இருந்து இறக்குமதி?

இந்தியாவிடம் இருந்து இறக்குமதி?

வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை அதிகரிப்பால் மக்கள் இதனை வாங்காமல் செல்வதாக மார்கெட்டுகளில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். காய்கறிகளின் விலை அதிகரிப்பால், ‘இவ்வளவு பணம் கொடுத்து வாங்குவதற்கு எங்களிடம் போதுமான பணம் இல்லை’ என்று மக்கள் வாங்காமல் செல்வதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் மற்ற உணவுப்பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் வெளிநாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்ய முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

10 பில்லியன் அமெரிக்க டாலர்

10 பில்லியன் அமெரிக்க டாலர்

மழையால் நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்படுத்து 10 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பாகிஸ்தான் அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளை சீர்படுத்தவும், நிவாரண பணிகள மேற்கொள்ளவும் அந்த அரசு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.