வெள்ள பாதிப்புகளாலும், நிதி நெருக்கடியாலும் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு இருக்கும் பாகிஸ்தான் நாட்டிற்குச் சரியான நேரத்தில் ஐஎம்எப் நிதியுதவியை அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றப் பிணை எடுப்புத் திட்டத்தின் ஏழாவது மற்றும் எட்டாவது மதிப்பாய்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் இது நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் நாட்டிற்குச் சுமார் 1.1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை அளிக்க ஐஎம்எப் அனுமதித்துள்ளது. இதைப் பாகிஸ்தான் அரசும் உறுதி செய்துள்ளது.
இந்தியாவிடம் கெஞ்சிய ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா.. எதற்காக..?
பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத பருவமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் சுமார் 1,136 உயிரை காவு வாங்கியுள்ளது, மேலும் 33 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது. 33 மில்லியன் மக்கள் என்பது பாகிஸ்தான் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 15% க்கும் அதிகமான மக்கள் தொகையாகும்.
மழை வெள்ளம்
தொடர் மழையால் சாலைகள், பயிர்கள், வீடுகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதுவரை ஏற்பட்ட பாதிப்புகளின் ஆரம்பக் கட்ட மதிப்பீட்டின் அளவு 10 பில்லியன் டாலர் என்று பாகிஸ்தானின் திட்டமிடல் அமைச்சர் அஹ்சன் இக்பால் தெரிவித்துள்ளார்.
இந்தியா உதவி
இதன் எதிரொலியாகப் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்குத் தேவையான காய்கறிகள் உட்பட அனைத்து உணவு பொருட்களும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு ஆலோசனை செய்து வருகிறது.
உதவிக்கரம்
பல அரபு நாடுகள் உதவிக்கரம் நீட்டிய வேளையில் பாகிஸ்தான் கடும் நிதிநெருக்கடிக்கு மத்தியில் வெள்ளத்தால் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் ஐஎம்எப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
ஐஎம்எப் நிதியுதவி
ஐஎம்எப் தற்போது ஒப்புதல் அளித்துள்ள நிதியுதவி திட்டத்தை ஒரு வருடம் நீட்டிக்கவும், மொத்த நிதியை 720 மில்லியன் டாலர் சிறப்பு வரைதல் உரிமைகள் அல்லது தற்போதைய பரிமாற்றத்தின்படி சுமார் $940 மில்லியன் அதிகரிக்கவும் ஒப்புக்கொண்டது.
உயிர்நாடியாக இருக்கும்
இந்த நிதியானது பேரழிவுகளுமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு ஒரு உயிர்நாடியாக இருக்கும் என நம்பப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
மிஃப்தா இஸ்மாயில்
ஐஎம்எப் ஒப்புதல் அளித்த அறிவிப்பு வெளியான ஒரு மணிநேரத்தில் பணத்தைப் பாகிஸ்தான் அரசு கணக்கிற்கு ஐஎம்எப் அனுப்பியுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் ட்விட்டரில் செய்தி வெளியிட்டார்.
IMF releases $1.1 billion bailout funds to Pakistan; Pakistan floods cost more than $10bn
IMF releases $1.1 billion bailout funds to Pakistan; Pakistan floods cost more than $10bn பாகிஸ்தான்-க்குக் குட்நியூஸ்: சரியான நேரத்தில் சரியான அறிவிப்பு.. ஐஎம்எப் ஒப்புதல்..!