மெயின்பூரி: “பிரதமர் மோடி அரசின் நலத்திட்ட உதவிகள் வாங்கு வங்கியை கருத்தில் கொள்ளாமலும், எந்தவித பாகுபாடு இல்லாமலும் தேவையானவர்களைச் சென்றடைகிறது” என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்பூரியில் நடந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். பயனாளிகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளின் உறுப்பினர்களிடையே அமைச்சர் பேசியது: “ஏழைகளுக்கு உதவுகின்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வாக்கு வங்கியை மனதில் கொள்ளாமல், சாதி, மத, இன பேதமில்லாமலும், கடைக்கோடியில் இருப்போருக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை தீன்தயாள் உபாத்யாயாவின் அந்த்யோதயா தத்துவத்தை முழுமையாக செயல்படுத்துவதாகும்
பிரதமர் நரேந்திர மோடியின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் முக்கியமானதாக பஞ்சாயத்ராஜ் அமைப்புகளும், அவற்றின் பிரதிநிதிகளாகிய நீங்களும் உள்ளீர்கள். அரசின் நலத்திட்டங்கள் கிடைக்காமல் ஒருவரும் இல்லை என்பதை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் நீங்கள் செயல்பட வேண்டும்.
இதுநாள் வரை மோடி அரசுக்கு எதிராக எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. வெளிப்படையான அனைவருக்கும் வழங்குவதற்கு ஏற்ற நிர்வாகத்தை கொண்டிருப்பதால் மோடி வெற்றி பெற்றிருக்கிறார்” என்று அமைச்சர் தெரிவித்தார்.