புதிர்ப் போட்டி கொண்டாட்டம் – 46 – பரிசு ரூ.5,000

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘‘கடைகள்/சூப்பர் மார்க்கெட்டுகள் என ஷாப்பிங் செல்லும்போது தரப்படும் பில்களை என்ன செய்வீர்கள்?” – ‘நச்’சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

1. கோள்களில் ஒன்று (5)

7. மண்ணால் செய்யப்படும் ஓர் இசைக் கருவி (3)

9. பாட்டு – போகும் ——- தூரமே (2)

16. வறண்ட நிலத் தாவரம் (3)

2. அறிவியல், இலக்கியம், மருத்துவம், அமைதிக்கு என ஆண்டுதோறும் வழங்கப்படும் உலக அளவிலான உயர்ந்த பரிசு (3)

4. இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரரின் பிற்பாதிப் பெயர். இவர் பெயரில் இந்தியில் திரைப்படம் வந்துள்ளது (2)

8. நிலம் உழுவதற்கு இது அவசியம் (2)

10. ஜெர்ரி கதாபாத்திரத்தில் இருப்பது (2)

11. மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் நம்மைக் காக்கும் (2)

12. ——- வலையில் புறாக்கள் சிக்கின (3)

14. விலங்குகளைச் சமநிலைப்படுத்த இது உதவுகிறது (2)

18. போர் நடக்கும் இடம் (5)

1. வயல்களில் ——-கள் தலை சாய்ந்து

நிற்கும் (5)

2. செயல்களுக்கு நல்ல ——- இருக்க

வேண்டும் (4)

7. இதுக்கு கால் உண்டா; கத்திரிக்காய்க்கு வால் உண்டா? (2)

13. மூச்சுவிடுவதை இப்படியும் சொல்லலாம் (4)

15. மைதாவில் பூரணம் வைத்துச் செய்யப்படும்

இனிப்பு (2)

3. இதிலிருந்து புறப்படும் அம்பு (2)

5. மதுரையில் புகழ்பெற்ற சேலைகள் (4)

6. ஊறுகாய் போட்டுவைக்கும் ஜாடி (4)

12. பயிர்களைக் காக்க தோட்டத்தைச் சுற்றி இதை அமைப்பார்கள் (2)

16. கிருஷ்ணரின் தாய்மாமா (4)

17. நாரதர் ——- நன்மையில் முடியும் (4)

18. மனிதர்கள் சுமந்து செல்லும் ஒரு வாகனம் (5)

1. விஸ்வநாதன் ஆனந்த்

2. ஹங்கேரி

3. கார்ல்சன்

4. கொனேரு ஹம்பி

5. தம்பி

6. அணி

7. அமெரிக்கா

8. சோவியத் ஒன்றியம்

சரியான விடையுடன்… செய்தி/சினிமா/சீரியல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்க நாம் பயன்படுத்தும் தளங்கள் (டிவி சேனல்,ஓடிடி, யூடியூப், மொபைல் ஆப்) இப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் பார்ப்பது எந்தத் தளத்தில்… ஏன்? – `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்…

1. ந.வைஜெயந்தி, நாகப்பட்டினம்

நாங்கள் செய்தி, சினிமா, சீரியல் போன்ற நிகழ்ச்சிகளை டிவி முன் அமர்ந்து பார்ப்பதுதான் வழக்கம். நாங்கள் வயதானவர்கள். டிவி முன் அமர்ந்து பார்ப்பதுதான் எங்களுக்குத் திருப்தியாக உள்ளது.

2. செ.சுபகீர்த்திகா, தாரமங்கலம்

செய்தி, நகைச்சுவை, குழந்தைகளுக்கு கார்ட்டூன், சினிமா, கல்வி போன்ற அனைத்தும் இருந்தாலும் நான் தேவையானவற்றை மட்டும் பார்த்துவிட்டு மற்ற வேலை களில் கவனம் செலுத்துவேன். இதற்கு டிவி சேனல்தான் சிறந்தது. நேரம், கூடுதல் செலவு மிச்சம்.

3. சந்திரா ராஜசேகரன், திருச்செந்தூர்

டிவி சேனல்களில் சீரியல்களை தினமும் பார்ப்பதுண்டு. திரைப்படங்கள் என்றாலும் டிவி சேனல்களிலேயே பார்த்துவிடுவேன். ஓடிடியிலும் யூடியூபிலும் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதே எனக்குத் தெரியாது.

4. லட்சுமி பாலசுப்ரமணியன், பெங்களூரு-4

செய்தி, சினிமா, சீரியல், தெய்விகம் உள்ளிட்ட நிகழ்ச்சி களை டிவி சேனலில்தான் பார்ப்பேன். ஏனெனில், டிவியில் மட்டும்தான் பெரிதாகக் காண முடிகிறது. கண்ணுக்கும் நல்லது. மற்றவற்றில் அவ்வளவு ஆர்வமில்லை.

5. ஆர்.விசாலி, மன்னார்குடி

தொடர்பு உலகத்தை உள்ளங்கையில் கொண்டுவரும் மொபைல் ஆப்தான் என்னுடைய சாய்ஸ். எதுவாயிருந் தாலும் எங்கேயிருந்தாலும் பார்த்துக்கொள்ள முடிவது இதில்தான். இந்த அவசரகால யுகத்தில் விரும்பும் நிகழ்ச்சிகளை நேரத்துக்குப் பார்ப்பது என்பது இயலாத ஒன்றாகும். கையடக்க மொபைல் இருந்தால்போதும் உலக நிகழ்ச்சிகளை உற்று நோக்க உதவும்.

6. ம.சபிதா, தூத்துக்குடி

நான் சினிமா, சீரியல், செய்தி பார்க்க உபயோகிப்பது மொபைல் ஆப்தான். உலகில் ஏதோ ஓர் இடத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்ல… இதில் வீடியோ, பாடல், காமெடி எனப் பல நிகழ்ச்சிகள் உள்ளன.

7. இரா.ஜயலட்சுமி, சென்னை-125

மொபைல் ஆப்… ஏனெனில், இலகுவாக உள்ளது. மேலும் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு எந்த சிரமமும் தராமல், நமக்குப் பிடித்தவற்றை மட்டும் பார்த்துக் கொள்ளலாம்.

8. க.சாந்தி, சென்னை-110

என் தேர்வு ஓடிடி தளங்கள்தான். விளம்பரங்கள் எதுவும் இல்லாமல், பல மொழிகளில் உள்ள சிறப்புப் படைப்பு களைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. இதன் மூலம் பல மொழிகளையும் கலாசாரத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

9. ஆர்.மேரி, திருச்சி-18

நாங்கள் நிகழ்ச்சிகளை ஓடிடியில் பணம் செலுத்திப் பார்க்கிறோம். காலையில் ஓய்வாக இருக்கும்போதே சீரியல் பார்த்துவிடுவோம். நாங்கள் இருவரும்

60 வயதைக் கடந்தவர்கள் என்பதால், பிடித்தமான ஒன்றிரண்டு சீரியல்தான் பார்ப்போம். சீக்கிரம் எழுந்து பார்ப்பதற்கு வசதியாக இருக்கிறது.

10. எஸ்.செல்வி, சேலம்-3

இரண்டு பேரும் காலை முதல் இரவு வரை கடையில் இருப்பதால் டிவி பார்க்க நேரம் இருக்காது. செய்திகள், ஒன்றிரண்டு சீரியல்கள், வாரத்துக்கு ஒரு படம் என நேரம் கிடைக்கும்போது அதிக விளம்பரம் இன்றி யூடியூபில் பார்ப்போம். டிவி என்னும் மாயவலையில் சிக்குவதில்லை.

பொதுவாக, ஊடக நுகர்வு என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. அதாவது, செவிவழிச் செய்தியாக ஆரம்பமான தகவல் பரிமாற்றம், பின்னர் மலையின் குகைகளில் வரையப்பட்ட கோட்டோவியங்கள் உட்பட பல்வேறு வடிவங்களாக பரிணாமம் பெற்றன. அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, செய்தித்தாள்கள்/பருவ இதழ்கள் என்றெல்லாம் உருமாறி, இன்றைக்கு உள்ளங் கையில் இருக்கும் மொபைல் வரை தகவல் களைப் பெறும் வழிமுறைகள் மாறி மாறி வடிவெடுத்துக்கொண்டே இருக்கின்றன.

அந்த வகையில், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் சினிமா, செய்திகள், சீரியல்கள் உள்ளிட்டவற்றை தொலைக்காட்சி, யூடியூப் தளங்கள், மொபைல் ஆப்கள், ஓடிடி தளங்கள் என்று பல்வேறு மீடியங்கள் மூலமாக மக்கள் நுகர்கிறார்கள். சரி, எந்தெந்த மீடியங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்று அவள் விகடன் புதிர்ப் போட்டிப் பக்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தோம். நீங்கள் பயன்படுத்துவது டி.வி/யூடியூப்/மொபைல் ஆப்/ஓடிடி இவற்றில் எந்தத் தளம் என்பது தான் கேள்வி.

வந்து குவிந்த பதில்களைப் பார்த்தபோது, அதன் சதவிகிதக் கணக்கை உங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. அதாவது, பெரும்பாலும் நகர்ப்புறம், கிராமப்புறம் என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் அனைத்து மீடியத்தையும் பயன்படுத்துகிறார்கள். அதற்குக் காரணம், இணையதள தொடர்பு என்பது இன்றைக்கு எளிதாகியிருப்பதுதான். அதேபோல, செய்தித்தாள்களை மட்டுமே படிக்கிறோம்; சினிமாவே பார்ப்பதில்லை; குழந்தைகளின் படிப்பை மனதில் கொண்டு, தேவைப்படும்போது மட்டும் ஓடிடி தளத்தில் சினிமா பார்க்கிறோம். கணவன்-மனைவி இருவருமே கடையில் இருப்பதால், தேவைப் படும்போது மட்டும் யூடியூப் பார்க்கிறோம்… இப்படி பல்வேறுவிதமான சுவாரஸ்யமான மற்றும் ஆக்கபூர்வமான பதில்களையும் பார்க்க முடிந்தது.

இதைப் பார்க்கும்போது, டி.வி-யின் பயன்பாடு என்பது கிட்டத்தட்ட பாதியாகக் குறைய ஆரம்பித்துள்ளது. மீதி பாதியை மற்ற தளங்கள் பங்கு போட்டுக்கொண்டு வளர ஆரம்பித்துள்ளன. இன்னும் சில ஆண்டுகளிலேயே இந்த வளர்ச்சியானது, இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றே தோன்றுகிறது. அதேசமயம், மற்றொரு மீடியமாக ‘பாட்காஸ்ட்’ என்பதும் தனியாக வளர ஆரம்பித்துள்ளது. அதாவது, சினிமா, கதைகள், நாவல்கள், செய்திகள், போட்டிகள் என்று ஆடியோவாகவே கேட்கும் போக்கு மெள்ள வளர்ந்து கொண்டுள்ளது. கண்களுக்கு வேலை கொடுக்காமல், காதுகளுக்கு மட்டும் வேலை கொடுத்தால் போதும். கூடவே, வெவ்வேறு வேலை களையும் செய்துகொண்டே கேட்டுக்கொள்ள முடியும்.

ஒரு காலத்தில் ஒலிச்சித்திரம் என்கிற பெயரில் சினிமாவையும், நாடகம் என்கிற பெயரில் இன்றைய சீரியல்களையும், செய்தி, இசைக்கச்சேரி உள்ளிட்டவற்றையும் ஆடியோவாகத்தான் மக்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள், டி.வி என்பது பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியதற்கு முன்பாக. ஆம், ரேடியோ மட்டுமே ஒரே மீடியமாக இருந்தது. வயல்வேலை, நெசவு வேலை, சமையல் வேலை என்று எந்தவிதமான வேலைகளையும் செய்துகொண்டே மக்கள் கேட்டு ரசித்தனர், பயன்பெற்றனர். மீண்டும்… அதே ரேடியோ யுகம் திரும்பிக்கொண்டிருக்கிறது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.