புதுச்சேரியில் 22ம் ஆண்டுக்கான விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி: பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 2022ம் ஆண்டுக்கான விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து பேரவையில் மேலும் பேசிய அவர், புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அணைத்து அதிகாரிகளும் காலம் தாழ்த்தாமல் கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்தால் மாநிலம் வளர்ச்சி அடையும். வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படும்.

புதுச்சேரில் மீனவர்களுக்கான டீசல் மானியம் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் புதிய சட்டமன்றம் கட்டப்படும்; துப்புரவுப் பணியாளர்கள் தூய்மை பணியாளர்களாக அழைக்கப்படுவார்கள். தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத கட்டடத் தொழிலாளர் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். 70 -ல் இருந்து 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.2,500-ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஆட்டோ தொழிலாளார்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும்.

புதுச்சேரியில் முதியோர், விதவை உள்ளிட்ட அனைத்து உதவித் தொகைகளும் பெற இதுவரை 15,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், எனவே அடுத்த மாதம் முதல் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் 100 வயது மேல் உள்ள முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.7,000 வழங்கப்படும் என்றும், 90 வயது முதல் 100 வயதிற்கு உள்ள முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3,500 ரூபாய் உதவித்தொகையை ரூ.4,000 உயர்த்தி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதிகளவு வருமானம் பெறுவோருக்கு வழங்கப்பட்டு வந்த மஞ்சள் ரேஷன் அட்டைக்கு பதில் பச்சை ரேஷன் அட்டை என்ற கவுரவ அட்டை வழங்கப்படும் என அமைச்சர் சாய் சரவணன் தெரிவித்தார்.

புதுச்சேரியில் குரங்கு அம்மை நோய் முற்றிலுமாக இல்லை; அறிகுறி வந்தால் சென்னைக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக புதுச்சேரியில் சொரிய சக்தி மூலம் ரூ.4.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிது. சூரிய சக்தி மின்சாரத்தை சொந்த தேவைக்கு போக அரசு மின்துறைக்கு வழங்கினால் பணம் தரப்படும். அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் 6வதில் இருந்து 12ம் வகுப்பு நீட்டிக்கிப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். ஒன்றிய அரசு நிதி தந்ததும் புதுச்சேரியில் பெண்களுக்கு பிங்க் நிற பேருந்துகள் இயக்கப்படும்.

ஆதி திராவிடர், பழங்குடியின மகளிருக்கு ஆட்டோ இயக்க பயிற்சி அளித்து இலவச ஆட்டோ வழங்கப்படும். மேலும் பேருந்துகள் மற்றும் அனைத்து பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்படும் என அமைச்சர் சந்திரபிரியங்கா கூறினார்.  மேலும் புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 5,500ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்தி வழங்கபடும்; மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க புதிய தொழில்நுட்பமான ஜியோ டியூப் அமைக்கப்பட உள்ளது. உயர்நீதிமன்றத்தின் கிளையை புதுச்சேரியில் விரைவில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பேரவையில் அமைச்சர் லெட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.