சேலம்: கடந்த மே 21ம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.8ம், டீசலுக்கு ரூ.6ம் குறைத்து ஒன்றிய அரசு அறிவித்தது.இது மே 22ம் தேதி அமலுக்கு வந்தது. தமிழகத்தை பொறுத்தளவில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கு விற்கப்பட்டதில் இருந்து ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.100.94ல் இருந்து ரூ.94.24 ஆகவும் குறைந்தது.கடந்த மே 22ம் தேதிக்கு பின், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 140 டாலர் என்ற நிலையில் இருந்து, 100 டாலர் வரை குறைந்து விட்டது. ஆனால், இந்த விலை குறைவின் பலனைமக்களுக்கு வழங்காமல் ஒன்றிய பாஜ அரசு இருந்து வருகிறது. நேற்றைய தினத்தோடு 100வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படவில்லை.