டெல்லி: முன்னாள் திட்டக் கமிஷன் உறுப்பினரும், கிராமப்புற பொருளாதாரம் குறித்த நாட்டின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவருமான பொருளாதார நிபுணர் அபிஜித் சென் திங்கள்கிழமை இரவு காலமானார். அபிஜித் சென் அவர்களின் வயது 72.
அபிஜித் சென் திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. எனவே அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம், ஆனால் நாங்கள் அங்குச் செல்வதற்குள் மரணம் அடைந்துவிட்டார் என்று அவரது சகோதரர் டாக்டர் ப்ரோனாப் சென் கூறினார்.
தங்கம் வாங்க இன்று சரியான நேரமா.. விலை எப்படியிருக்கு தெரியுமா?
அபிஜித் சென் கல்வி
நவம்பர் 18, 1950 இல் ஜாம்ஷெட்பூரில் பிறந்த அபிஜித் சென், டெல்லியில் உள்ள சர்தார் படேல் வித்தியாலயாவில் பள்ளியில் பள்ளி படிப்பை முடிந்தார். இதைத் தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்றார். பொருளாதாரத்திற்கு மாறிய அபிஜித் சென், தனது ஆய்வறிக்கைக்காகக் கேம்பிரிட்ஜில் முனைவர் பட்டம் பெற்றார்.
அபிஜித் சென்
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அரசு மற்றும் முக்கியப் பதவிகளில் பணியாற்றியவர் அபிஜித் சென். இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பித்தார். இருவருடை மாணவர்கள் இன்று பல முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
அபிஜித் சென் 1985 இல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார ஆய்வுகள் மற்றும் திட்டமிடல் மையத்தில் சேருவதற்கு முன்பு சசெக்ஸ், ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் எசெக்ஸ் ஆகிய இடங்களில் பொருளாதாரம் கற்பித்தார்.
பொருளாதார நிபுணர்கள்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதார நிபுணர்களான கிருஷ்ண பரத்வாஜ், பிரபாத் பட்நாயக், சி.பி. சந்திரசேகர், அமித் பாதுரி மற்றும் அவரது மனைவி ஜெயதி கோஷ் ஆகியோர் உடன் இணைந்து வளர்ச்சிப் பொருளாதாரம் மற்றும் இந்தியப் பொருளாதாரம் பற்றிய ஆய்வுக்கான முன்னணி மையமாக உயர்த்த பணியாற்றினர் அபிஜித் சென்.
அரசின் கொள்கை பிரிவு
கல்வி துறையைத் தாண்டி அரசின் கொள்கை பிரிவிலும் அபிஜித் சென் முக்கியப் பங்காற்றினார். 1997 ஆம் ஆண்டில், ஐக்கிய முன்னணி அரசாங்கம் அவரை விவசாயச் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் தலைவராக நியமித்தது – விவசாய அமைச்சகம் பல பண்ணை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பரிந்துரைக்கும் பணியை இவரது வழிகாட்டுதலின் பெயரில் மேற்கொண்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பதவிக்காலம் முடிவடைந்தபோது, நீண்ட காலத் தானியக் கொள்கை குறித்த உயர்மட்ட நிபுணர்களின் குழுவின் தலைவராகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் அவரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.
மன்மோகன் சிங்
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் அரிசி மற்றும் கோதுமைக்கான பொது விநியோக முறையை (PDS) அறிமுகப்படுத்தும் பணிகளையும் அபிஜித் சென் மேற்கொண்டார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2004 முதல் 2014 வரை திட்டக் கமிஷனில் உறுப்பினராக அபிஜித் சென் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பத்ம பூஷன் விருது
2010 இல், பொதுச் சேவைக்காக அபிஜித் சென்-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அவர் மனைவி ஜெயதி கோஷ்-ம் பொருளாதார நிபுணர் மற்றும் மகள் ஜாஹ்னவி சென், தி வயர் பத்திரிகையின் துணை ஆசிரியராக உள்ளார்.
Abhijit Sen Passed Away; Leading Economist of Indian Agriculture, Padma Bhushan awardee
Abhijit Sen Passed Away; Leading Economist of Indian Agriculture, Padma Bhushan awardee பொருளாதார நிபுணரும், திட்ட கமிஷனின் முன்னாள் உறுப்பினருமான அபிஜித் சென் காலமானார்