முதல்ல இந்த விதிமுறையை நீக்குங்க.. EPFO அமைப்பு வைக்கும் கோரிக்கை..!

இந்திய ஊழியர்களின் மிகப்பெரிய நிதியை நிர்வாகம் செய்யும் EPFO அமைப்பு அதிக வருமானத்தை ஈர்க்க பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில் தற்போது முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர திட்டமிட்டு அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.

இந்தியாவில் இருக்கும் அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கு EPFO அமைப்பின் பலன்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக EPFO அமைப்பில் இருக்கும் முக்கியமான விதிமுறையைத் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இந்த விதிமுறை தளர்வுக்கு மட்டும் அரசு ஒப்புதல் அளித்தால் பெரிய அளவிலான மாற்றங்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் உருவாகும்.

EPFO அப்படி எந்த விதிமுறையைத் தளர்த்தத் திட்டமிடுகிறது. வாங்க முழுமையாகப் பார்ப்போம்.

ஓய்வூதியதாரர்களுக்கு EPFO முக்கிய அறிவிப்பு..இனி ஈஸியா ஆயுள் சான்று பெறலாம்.. !

 EPFO அமைப்பு

EPFO அமைப்பு

EPFO அமைப்பு தனது சேவைகளைக் குறிப்பிட்ட அளவிலான சம்பள அளவு கட்டுப்பாடு மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை கட்டுப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்குத் தான் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் அடிப்படை சம்பளம் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை கட்டுப்பாடுகளை நீக்கக் கோரிக்கை வைத்துள்ளது.

சம்பளம் அளவு

சம்பளம் அளவு

அதாவது EPFO அமைப்பின் சேவைகள் மற்றும் திட்டங்களில் சேர வேண்டும் என்றால் ஒரு ஊழியர் குறைந்த பட்சம் 15000 ரூபாய் சம்பளத்தையும், 20க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.

ஊழியர் எண்ணிக்கை
 

ஊழியர் எண்ணிக்கை

அதாவது இந்த இரண்டு அடிப்படை விதிமுறைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கு EPF உட்பட அனைத்து சேவைகளும் கிடைக்கும். உதாரணமாக 10 ஊழியர்கள் கொண்ட ஒரு நிறுவனத்தில் 5 பேர் 15000 மேல் சம்பளம் வாங்கினாலும் அவர்களுக்கு EPFO திட்டச் சேவைகள் கிடைக்காது.

 விதிமுறை

விதிமுறை

EPFO தற்போது சுமார் 55 மில்லியன் ஆக்டிவ் வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது. இந்நிலையில் Employees’ Provident Funds & Miscellaneous Provisions Act, 1952 விதியின் கீழ் இருக்கும் இக்கட்டுப்பாட்டை நீக்கப்படுவதன் மூலம் அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் அளிக்கப்படுவது மட்டும் அல்லாமல் சுய தொழில் செய்பவர்களுக்குக் கூட இதன் சேவைகளை அளிக்க முடியும் என EPFO கூறுகிறது.

EPF வாடிக்கையாளர்கள்

EPF வாடிக்கையாளர்கள்

EPFO அமைப்பு தனது EPF வாடிக்கையாளர்களுக்கு ப்ராவிடென்ட் பண்ட், பென்ஷன், இன்சூரன்ஸ் பலன்களை அளிக்கிறது. தற்போது இருக்கும் வாடிக்கையாளர் மூலம் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகை கார்பஸ் ஆக வைத்துள்ளது. இதில் பெரும் பகுதி பங்குச்சந்தையில் சேர்க்கப்படுகிறது.

ETF திட்ட முதலீட்டு அளவு

ETF திட்ட முதலீட்டு அளவு

EPFO அமைப்புத் தற்போது 15 சதவீத தொகையைப் பங்குச்சந்தை ETF திட்டத்தில் முதலீடு செய்கிறது. இதை 25 சதவீதமாக அதிகரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது உயர்த்தப்பட்டால் EPF திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டு உள்ள மக்களின் தொகைக்கு அதிகப்படியான வட்டி லாபம் கிடைக்கும்.

EPF பலன்கள்

EPF பலன்கள்

இந்நிலையில் தற்போது அடிப்படை சம்பளம் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை கட்டுப்பாடுகளை நீக்கினால் EPF பலன்களைப் பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் அதேபோல் EPFO அமைப்பின் கார்பஸ் பணமும் பெரிய அளவில் உயரும். இது பெரிய அளவிலான லாபத்தையும், நன்மைகளையும் அளிக்கும்.

கமெண்ட்

கமெண்ட்

அடிப்படை சம்பளம் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து மக்களாகிய உங்களின் கருத்து என்ன..? மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

EPFO wants wage, headcount limits to be removed for providing EPF services

EPFO wants wage, headcount limits to be removed for providing EPF services முதல்ல இந்த விதிமுறையை நீக்குங்க.. EPFO அமைப்பு வைக்கும் கோரிக்கை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.