முதல்வர் ஸ்டாலின் ஷாக்; கூட்டணி கட்சிகள் திடீர் நெருக்கடி!

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில்,

கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் 18 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகள், சிபிஎம் 2 தொகுதிக மற்றும் சிபிஐ 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

மேலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4 இடங்களிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 இடத்திலும், தமிழக வாழ்வுரிமை கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றன.

இந்த தேர்தலின்போது கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட திமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் தொகுதிகளின் எண்ணிக்கையை அவ்வளவு எளிதில் உயர்த்தவே இல்லை.

இது கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், கூட்டணியில் இருந்து கழற்றிட திமுக ப்ளான் போடுகிறதோ? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. எனவே திமுகவுடனான கூட்டணியை எந்த கட்சிகளும் இறுதி செய்யாததால் இழுபறியே நீடித்து வந்தது.

திமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு வந்த அனைத்து கட்சிகளுமே திரும்ப திரும்ப பேசியும் திருப்தி ஏற்படாததால் அடுத்த ரவுண்டில் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும் என்பதுபோல் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தனர்.

அதே சமயம் தமிழ்நாட்டில் நடந்து வந்த அதிமுக தலைமையிலான ஆட்சி மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தி இருந்ததாலும், பாஜகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருந்ததாலும் திமுககவுக்கு சாதகமான ஒரு சூழல் ஏற்பட்டு இருந்தது.

இதை எல்லாம்ல் கணக்கிட்டு பார்த்த திமுக தன்னை நம்பி வந்த கூட்டணி கட்சிகள் அதிமுக- பாஜக கூட்டணியையும் விரும்ப மாட்டார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு தொகுதி பங்கீட்டில் சீட்டுகளை இறுக்கி பிடித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு பதிலடி தரும் விதமாக மாற்று அணிக்கு தாவலாமா? என்று, யோசித்துக்கொண்டு இருந்ததை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 6 தொகுதிகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்து மற்ற கட்சிகளை அதிர வைத்தார்.

தமிழகம் முழுவதும் விசிகவுக்கு குறிப்பாக வட மாவட்டங்களில் நல்ல செல்வாக்குள்ள நிலையில் திருமாவளவன் வெறும் 6 சீட்டுகளுக்கு ஒப்புக்கொண்டது தமிழக அரசியலில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதற்கு திருமாவளவன், ‘சீட்டுகளுக்காக திமுக கூட்டணியை கை விட்டால் அது.. சனாதன சக்திகளுக்கு சாதகமாக அமைந்துவிடும். சனாதன சக்திகள் தேர்தலில் தோல்வி அடைய வேண்டுமானால் திமுக கூட்டணி வலுவடைய வேண்டும்’ என விளக்கம் கொடுத்தது தமிழக அளவில் பெரிதும் பேசப்பட்டது.

இந்த களேபரத்துக்கு மத்தியில் திருமாவை தொடர்ந்து மற்ற கட்சிகளும் திமுக கூட்டணியை வேறு வழியில்லாமல் இறுதி செய்தன. ஆனாலும் அவர்களது இறுகிய முகத்தை பார்த்த திமுக தலைமை, ‘கவலை வேண்டாம். ஆட்சிக்கு வந்ததும் கூட்டணிக்கு முக்கியத்துவம் தந்து வாரிய தலைவர் பதவி வழங்கப்படும்’ என, கூறி ஆறுதல் அளித்து இருந்தது.

அதன்படியே, நடந்து முடிந்த அந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் கடந்துள்ள சூழலில் அளித்த வாக்குறுதி என்னாச்சு? என கூட்டணி கட்சிகள் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பி இருப்பது திமுகவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது வாரிய பதவிகளை பொறுத்தவரை பீட்டர் அல்போன்ஸ், எர்ணாவூர் நாராயனன், பொன்குமார் மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோர் உள்பட ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

திமுகவினருக்கே கூட, பெரியளவில் வாரிய பதவிகள் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கமும், வருத்தமும் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பலமாக உள்ளது. அப்படி இருக்கையில் தற்போது வாரிய தலைவர் பதவி கேட்டு கூட்டணி கட்சிகள் குடைச்சல் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே சமயம் தன்னை தூக்கிவிட்ட திமுக தொண்டர்களுக்கு தருவதா? அல்லது அளித்த வாக்குறுதிப்படி கூட்டணி கட்சிகளுக்கு தருவதா? என, புரியாமல் முதல்வர் ஸ்டாலின் குழப்பம் அடைந்து இருப்பதாக உடன் பிறப்புகள் சொல்லி வருத்தப்படுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.