மெக்டொனால்டு உணவு பாக்கெட்டில் கந்தல் துணி.. வாடிக்கையாளரின் அதிரடி நடவடிக்கை!

பெரிய உணவு நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் உணவு பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து நம்பிக்கையுடன் உணவுகளை வாங்குகிறார்கள்.

ஆனால் சில நேரங்களில் கவனக்குறைவு காரணமாக அந்த உணவுப் பொருட்களின் பேக்கேஜில் தேவையில்லாத பொருட்கள் இருப்பது குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த மெக்டொனால்டு வாடிக்கையாளர் ஒருவர் தான் வாங்கிய உணவு பேக்கேஜில் கந்தல் துணி இருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெக்டொனால்டு உணவகம்

வடக்கு அயர்லாந்தில் மார்ட்டின் ஹோம்ஸ் என்பவர் தனது குடும்பத்தினருக்கு பிடித்த உணவை சனிக்கிழமை இரவு மெக்டொனால்டு உணவு நிறுவனத்தில் ஆர்டர் செய்தார். அந்த உணவு டெலிவரி செய்யப்பட்டவுடன் அவருடைய மகன் மிகவும் ஆசையுடன் தான் ஆர்டர் செய்த உணவின் பேக்கேஜை பிரித்தார். அப்போது அதில் அவர் ஆர்டர் செய்த சிக்கன் உணவுக்கு பதிலாக கந்தல் துணி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கந்தல் துணி

கந்தல் துணி

சீல் வைக்கப்பட்ட பேக்கேஜில் வெறுமனே மடிக்கப்பட்ட ஒரு கந்தல் துணி மட்டும் இருந்தது. அதில் சிக்கன் உணவு எதுவுமே இல்லை என்பதை பார்த்ததும் மாட்டின் ஹோம்ஸ் பெரும் அதிருப்தி அடைந்தார். இதனை அடுத்து அவருடைய மனைவி மெக்டொனால்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர் அதிகாரியை தொடர்பு கொண்டு புகார் கூறினார்.

இழப்பீடு
 

இழப்பீடு

இதுகுறித்து உடனடியாக உணவு டெலிவரி செய்த மெக்டொனால்டு கிளையின் மேலாளருக்கு தகவல் அனுப்பப்பட்டது. மேலாளர் உடனே மார்ட்டின் ஹோம்ஸ் அவர்களை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் இதற்கு இழப்பீடாக இலவச உணவு வகைகளை தரவும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சமாதானம் இல்லை

சமாதானம் இல்லை

ஆனால் மார்ட்டின் இதில் சமாதானமாக விரும்பவில்லை. எனது மகன் உணவு பாக்கெட்டை ஆசையுடன் திறந்துபோது அதில் ஒரு கந்தல் துணி இருந்ததை பார்த்து எனது மகன் அடைந்த ஏமாற்றத்தை என்னால் தாங்க முடியவில்லை. இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. சமையலறையிலிருந்த யாரோ ஒருவர்தான் இந்த உணவு பாக்கெட்டில் உள்ள உணவை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கந்தல் துணியை வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

டிஸ்மிஸ்

டிஸ்மிஸ்

மெக்டொனால்டு நிறுவனம் இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறிய போதிலும், இலவச உணவுகளை இழப்பீடாக தருவதாக கூறியும் மார்ட்டின் இதுகுறித்து சுகாதார துறையிடம் புகார் அளித்தார். இந்த புகார் காரணமாக மெக்டொனால்டு அதிரடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட சமையலறை ஊழியரை கண்டுபிடித்து அவரை டிஸ்மிஸ் செய்துள்ளதாக கூறியுள்ளது.

நடவடிக்கை

நடவடிக்கை

இது எங்களுக்கு ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட நிகழ்வாக இருக்கலாம். ஆனால் இந்த நிகழ்வு தொடரக் கூடாது என்பதற்காகவே நடவடிக்கை எடுக்க முடிவு செய்தேன் என்று பேட்டி ஒன்றில் மார்ட்டின் ஹோம்ஸ் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Man finds folded dishcloth in McDonald’s meal pack in Ireland, company apologises

Man finds folded dishcloth in McDonald’s meal pack in Ireland, company apologises | மெக்டொனால்டு உணவு பாக்கெட்டில் கந்தல் துணி.. வாடிக்கையாளரின் அதிரடி நடவடிக்கை!

Story first published: Tuesday, August 30, 2022, 7:49 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.