சீனாவில் தயாராகும் 12 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான மொபைல் போன்கள் இந்தியாவில் தடை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார்.
சீனாவில் தயாராகும் குறைந்த விலை மொபைல் போன்கள் இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகி வருகிறது. இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களின் விற்பனை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சீனாவில் தயாராகும் 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான மொபைல் போன்கள் இந்தியாவில் விற்பனை செய்ய தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
சீனா-வின் பெல்ட் & ரோடு திட்டத்தின் நிலை என்ன.. சொந்த காசில் சூனியமா..?
சீன மொபைல் போன்கள் தடை
சீன மொபைல் போன்கள் தடை செய்வது குறித்து கூறிய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், சீன மொபைல் நிறுவனங்கள் தயாரிக்கும் 12,000 ரூபாய்க்கு குறைவான மொபைல் போன்களை இந்தியாவில் விற்பனை செய்ய தடை செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்து உள்ளார்
ஏற்றுமதி
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘நாட்டின் மின்னணு சுற்றுச்சூழல் அமைப்பில் இந்திய நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு என்றும் ஆனால் அதே நேரத்தில் வெளிநாட்டு மொபைல் போன்களை விலக்குவது என்பது அர்த்தமற்ற காரியம் என்றும் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து ஏற்றுமதியை அதிகரிக்க சில சீன நிறுவனம் மொபைல் நிறுவனங்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
உள்நாட்டு உற்பத்தி
சீன நிறுவனங்கள் தயாரிக்கும் 12 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான மொபைல் போன்களை விற்பனை செய்வதை தடை செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று உறுதிபட கூறிய அமைச்சர் அதே நேரத்தில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது குறித்து தொழில்துறை அமைப்பான ICEA உடன் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
300 பில்லியன் டாலர்
2025-26 ஆம் ஆண்டிற்கு 300 பில்லியன் டாலர் மின்னணு உற்பத்தி மற்றும் 120 பில்லியன் டாலர் ஏற்றுமதி அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 76 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தற்போதைய இந்திய உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் எலக்ட்ரானிக்ஸ் விநியோகச் சங்கிலியில் இந்திய பிராண்டுகள் மற்றும் இந்திய தொழில் நுட்ப தொழில் முனைவோருக்கு பெரும் பங்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தடை இல்லை
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது என்றும் அதனால் உற்பத்தியை அதிகமாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார். மேலும் நாம் இன்னும் ஏற்றுமதியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். அவரது இந்த பேட்டியிலிருந்து ரூபாய் 12 ஆயிரத்துக்கும் குறைவான சீன மொபைல்கள் தடை செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
No plan to ban Chinese phones under Rs.12k segment: Minister Rajiv Chandrasekhar
No plan to ban Chinese phones under Rs.12k segment: Minister Rajiv Chandrasekhar | ரூ.12,000க்கும் குறைவான சீன மொபைல்போன்களுக்கு தடையா? மத்திய அமைச்சர் விளக்கம்!